உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிரந்தர தீர்வு தராமல் ஏமாற்றுவதா? பார்லி விவாதத்தில் கார்கே கொந்தளிப்பு

நிரந்தர தீர்வு தராமல் ஏமாற்றுவதா? பார்லி விவாதத்தில் கார்கே கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வேலையின்மை பிரச்னைக்கு பா.ஜ., அரசு தற்காலிகத் தீர்வைக் கூட வழங்காமல் இளைஞர்களை ஏமாற்றுகிறது' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.முன்னணி 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி (Internship)அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பயிற்சி காலத்தில் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்; பயிற்சி செலவுகளை நிறுவனங்கள் ஏற்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

துரோகம்

இது தொடர்பான விவாதத்தில், ராஜ்யசபாவில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: பா.ஜ.,வின் பட்ஜெட்டில் 'பி' என்பது 'துரோகம்' என்பதைக் குறிக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை பா.ஜ., உருவாக்கி உள்ளது. முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி வழங்குவோம் என பா.ஜ., அரசு கூறுகிறது.

இடஒதுக்கீடு

கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையின்மை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை விரும்புகிறார்கள். ஆனால் பா.ஜ., அரசு தற்காலிகத் தீர்வைக் கூட வழங்காமல் அவர்களை கடுமையாக ஏமாற்றுகிறது. பொதுத் துறையில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளை சேர்ந்த இளைஞர்களை இடஒதுக்கீடு மூலம் சேர்க்கக் கூடாது என பா.ஜ., விரும்புகிறதா? இவ்வாறு கார்கே பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaranarayanan
ஆக 01, 2024 20:30

வேலை வாய்ப்பு என்பது சமூகத்தில் படித்தவர்களுக்குத்தான் என்று எப்போது சட்டம் வருகிறதோ அப்போதுதான் நாடே முன்னேறும் எப்போது பார்த்தாலும் நாடு சுந்தந்திரம் அடைந்ததிலிருந்த்து இட ஒதுக்கீடு இடஒதுக்கீடு என்று சொல்லி ஒரு மாயை தோற்றத்தை உண்டுபண்ணி ஒரு சில சமுதாயத்தினர் மட்டும்தான் எல்லா சலுகைகளையும் வாழ்வு பூராவும் பெற்று வருவதினால் மற்றவர்கள் ஏமாந்த சோனகிரியாகிறார்கள் வேலை வாய்ப்பிற்காக அண்டை நாடுகளுக்கு சென்று அவர்கள் பிழைக்க தள்ளப்படுகிறார்கள் எப்போதுதான் இதற்கு விடிமோட்சம் கிடைக்குமோ தெரியவில்லையே


ஆரூர் ரங்
ஆக 01, 2024 20:11

எல்லோரும் கைகட்டி மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது காங்கிரசின் எண்ணம். ஒரு நாளும் அவர்கள் முதலாளிகளாகி விடக் கூடாது.சுயதொழில் செய்யக்கூடாது என்ற எண்ணமும் இதற்குக் காரணம். ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்தால்தானே காசுக்கு ஓட்டு வாங்க முடியும்?


தாமரை மலர்கிறது
ஆக 01, 2024 19:59

வேலைக்கு ஆள் கிடைக்காமல் முதலாளிகள் கதறுகிறார்கள். இளைஞர்கள் ஐடி துறையில் லட்சக்கணக்கில் சம்பாரிக்கிறார்கள். பிற இளைஞர்கள் பிளம்பர், எலெக்ட்ரிசின், மெக்கானிக், பரோட்டா மாஸ்டர் என்று அனைவரும் அறுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாரிக்கிறார்கள். இன்றைக்கு தெருவோரத்தில் போண்டா விற்பவர்கள் கூட ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு கல்லா கட்டுகிறார். பாராளுமன்றத்தில் இஷ்டத்திற்கு பொய் சொல்ல கூடாது. சோம்பேறிகளுக்கு எப்போதும் வேலை கிடைக்காது. மேனாமினுக்கி வேலையை எதிர்பார்க்க கூடாது. உழைப்பாளிகளுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை ஒழித்தால், அரசு துறையும் தனியார் துறை போன்று சிறப்பாக செயல்படும். உழைக்காமல் சொகுசாக பிறப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டில் நுழைந்தவர்களுக்கு உழைப்பின் அருமை புரியாது. கார்கே மாதிரி வாய்கிழிய குறை மட்டுமே சொல்வார்கள்.


Venkataraman
ஆக 01, 2024 19:34

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது வேலைவாய்ப்புக்காக ஏதாவது செய்ததா ? ஊழல் கொள்ளை தவிர வேறு ஏதாவது செய்ததா? இப்போது ஒன்றுமே தெரியாதது போல மற்றவர்கள் மேல் பழியை போடுகிறார்கள்.


Swaminathan L
ஆக 01, 2024 17:54

முப்பது, நாற்பது கோடி இளைஞர், இளைஞிகளின் வேலையின்மைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எந்த அரசாலும் முடியவே முடியாது. சுய தொழில், அவரவர் கல்வி, திறமை, திறன் மற்றும் வாய்ப்புகளுக்குத் தகுந்தாற்போல் பிழைக்கும் வழிகளைத் தேடிக் கண்டுபிடித்து பொருள் ஈட்ட வேண்டியது தான். விவசாயப் பணிகள் கடந்து இங்கே கோடிக்கணக்கானவர்க்கு வேலை வாய்ப்பு தரும் மாற்று வழிகள் ஏதுமில்லை.


மேலும் செய்திகள்