உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரண்மனை நிர்வாக அலுவலகத்தில் சோதனை

அரண்மனை நிர்வாக அலுவலகத்தில் சோதனை

மைசூரு: மைசூரு அரண்மனை அலுவலகத்தில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.மைசூரு அரண்மணையில், நுழைவு சீட்டு விற்பனை மற்றும் வாகன பார்க்கிங் கட்டணத்தில் முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, லோக் ஆயுக்தாவிலும் புகார் அளிக்கப்பட்டது.எனவே லோக் ஆயுக்தா எஸ்.பி., சஜித் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், அரண்மனை நிர்வாக வாரிய அலுவலகத்தில், நேற்று சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 4.10 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது ஊழியர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் தொகை வசூலிப்பதாகவும், கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ