ஜனாதிபதியிடம் முதல்வர் வாழ்த்து
ராஷ்ட்ரபதி பவன்:ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதிதாக பதவியேற்ற முதல்வர் ரேகா குப்தா சந்தித்து வாழ்த்து பெற்றார்.ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல்வர் ரேகா குப்தா சந்தித்து வாழ்த்து பெற்றார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தன் 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்து முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள பதிவில், 'ஜனாதிபதியை நான் நல்லுறவு நிமித்தமாக சந்தித்தேன். டில்லியின் வளர்ச்சிப் பயணத்தில் மாநில அரசு எப்போதும் ஜனாதிபதியின் வழிகாட்டுதலைப் பெறும் என்று நான் நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.