உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் சித்தராமையா இன்று பெலகாவி வருகை

முதல்வர் சித்தராமையா இன்று பெலகாவி வருகை

பெலகாவி: முதல்வர் சித்தராமையா, பெலகாவிக்கு இன்று வருகை தருகிறார். ஒரே மாதத்தில் ஜார்கிஹோளி சகோதரர்களின் கோட்டைக்கு, இரண்டாவது முறையாக வருகிறார்.வெள்ள சேதங்களை பார்வையிட, ஆகஸ்ட் 5ல், கோகாக் தாலுகாவுக்கு முதல்வர் சித்தராமையா வருகை தந்தார். இரண்டாவது முறையாக, இன்று பெலகாவி செல்கிறார். கோகாக் உட்பட நான்கு இடங்களில் கிராந்தி வீர சங்கொல்லி ராயண்ணா சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.பெங்களூரில் இருந்து, சிறப்பு விமானம் மூலம் காலை 11:45 மணிக்கு பெலகாவி விமான நிலையத்திற்கு வரும் முதல்வர், சாலை வழியாக கோகாக் தாலுகாவில் உள்ள கவுஜல்கி கிராமத்திற்கு செல்கிறார். கவுஜல்கியில் சங்கொல்லி ராயண்ணாவின் சிலையை திறந்து வைப்பார். அதன்பின் குருபா சங்க மாநில தலைவர் டாக்டர் ராஜேந்திர சன்னக்கி பண்ணை வீட்டிற்கு செல்கிறார். இங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.அங்கிருந்து புறப்பட்டு, கள்ளிகுட்டி, யாத்வாடா, கல்லோலி ஆகிய கிராமங்களுக்கு சென்ற ராயண்ணாவின் சிலைகளை சித்தராமையா திறந்து வைப்பார். அதன்பின் சிறப்பு விமானம் மூலம், பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை