உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நாடு முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இந்தியாவை பொறுத்தவரை பெண்களின் திருமண வயது 18 என்றும், ஆண்களின் திருமண வயது 21 என்றும் உள்ளது. இந்த வயதிற்கு கீழ் ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொண்டால், அது குழந்தை திருமணமாகவும், சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன என தரவுகள் தகவல் தெரிவிக்கிறது.இந்நிலையில், குழந்தை திருமணத்தை தடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜே.பி.பார்த்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(அக்.,18) விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: * குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது.* குழந்தை திருமண விவகாரத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்.* சிறுவர்களின் பாதுகாப்பில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.* நாடு முழுவதும் குழந்தை திருமணத்தை தடுக்க அனைத்து அரசு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.* நாடு முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.* நாடு முழுவதும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kanns
அக் 19, 2024 09:16

RulingPartyGovt&Courts MUST Arrange Marriage & FamilyLife of All UnMarried Males by Whatever Means incl Force


அப்பாவி
அக் 19, 2024 02:55

காலைல மூணு மணிக்கே அலாரம் வெச்சு எழுப்பி உடணுமா? தப்பு செய்யறவனை தண்டிக்கத் துப்பில்ல.


Thiru Thiru
அக் 18, 2024 22:42

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மக்களை ஆளுவதைவிட மறைமுகமாக இந்த கோர்ட்டுகள் இப்போது நேரடியாக நீதித்துறை எப்பொழுது நேரடியாகவே மக்களை ஆளும் முயற்சியில் இறங்குவது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை முதலில் உங்கள் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் கோடிக்கணக்கில் குவிந்துள்ள வழக்குகளை கவனியுங்கள். பிறக நாட்டைச் சீர்திருத்தலாம்


GMM
அக் 18, 2024 18:28

குழந்தை திருமணம் தண்டனைக்கு உரிய குற்றம் என்றால் நீதிமன்றம் மாற்ற, நிறுத்த முடியாது. குறைக்கலாம். பயன் அல்லது பயனற்றது பற்றி சட்டத்தை திருத்தம் செய்யாமல் விமர்சிக்க முடியாது. குற்றம் பற்றி கருத்து, யோசனை கூறும் போது குற்றம் அதிகரிக்கும். புதிய வழிகாட்டியில் பெற்றோர் , உறவினர் சம்மதம் கட்டாயம் என்று இருக்க வேண்டும். குடும்ப அமைப்பை தனி தனியாக மாற்ற நிர்வாக, நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா? திருமண வயதை 21-24 என்று மாற்ற வேண்டும். ஜனாதிபதி, கவர்னர் , தலைமை செயலர் ... போன்ற gazatted authority - உத்தரவு தான் செல்லும்.


என்றும் இந்தியன்
அக் 18, 2024 16:58

விழிப்புணர்வு பொறுப்புணர்வு எல்லாம் அனாவசியம். அவர்கள் செய்யும் தவறான காரியங்களுக்கு சரியான தண்டனை கொடுத்தால் ஒன்றே அது தடுக்கப்படும். ஒரே வார்த்தை இதில் பெற்றோர்கள் உறவினர்கள் அனைவரும் சம்பந்தம் நிச்சயம் இருக்கும் சரியான தண்டனை மரண தண்டனை. அதுவும் ஒரு வாரத்தில்


தமிழ்வேள்
அக் 18, 2024 13:48

குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணம் லவ் ஜிஹாத் மற்றும் நாடக காதல் பிரச்சினைகளே ....எந்த vithamaana thirumanamaaka இருந்தாலும் பதிவு அவசியம் என்று சட்டம் தேவை .அதேநேரம் மணமகளின் பெற்றோர், மணமகனின் பெற்றோர்து எழுத்து பூர்வ மற்றும் ஆஜர் மூலம் ஒப்புதல் வேண்டும் என்றும் சட்டம் அவசியம் ....மதம் மாறுதல் கோர்ட்களால் மட்டுமே அங்கீகரிக்கப்படவேண்டும் ....ஜமாஅத் அல்லது சர்ச்கள் கொடுக்கும் மத மாற்ற சான்றிதழ்கள் செல்ல தக்கவை அல்ல என்ற சட்டமும் தேவை ...மதமாற்றம் தடுக்கப்பட்டால்தான் இந்த மாதிரி பிரச்சினைகள் ஓயும் .


வைகுண்டேஸ்வரன்
அக் 18, 2024 17:24

இல்லை. 16 வயதில் ராமகிருஷ்ண பரம ஹம்சர், 7 வயது சாரதா தேவியை மணம் புரிந்தது, ராமர் சீதா தேவியை 6 வயதில் மணம் புரிந்தது எல்லாம் தான் precedences.


தமிழ்வேள்
அக் 18, 2024 17:31

வைகுண்டம் , இறை தூதர் தனது 52 வயதில் ஆறு வயது பெண்ணை மணந்ததும் இதில் அடக்கம் ..ஓகே ?


சமீபத்திய செய்தி