| ADDED : மே 12, 2024 09:43 PM
பெங்களூரு: கடந்த மூன்று, நான்கு மாதமாக பெங்களூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, மக்களை வாட்டி வதைத்தது. வீட்டில் இருந்து வெளியேவரவே மக்கள் தயங்கினர். பல மாவட்டங்களில் மழை பெய்த போதும், பெங்களூரில் பெய்யவில்லை. வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்தது.கடந்த ஒரு வாரமாக, பெங்களூரில் பரவலாக மழை பெய்கிறது. பல இடங்களில் அசம்பாவிதங்களையும் ஏற்படுத்தியது. பெங்களூரில் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது. திடீரென வானிலை மாறியதால், மக்களின் உடல் ஆரோக்கியம் பாதிப்படைந்துள்ளது.விஷக்காய்ச்சல், மூச்சுத்திணறல், தொண்டை வலி, சரும நோய், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என, பல விதமான உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. மருத்துவமனையில் சேரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.வானிலை மாற்றத்தால், உடல் நிலை பாதிப்பு அறிகுறி தெரிந்தால், உடனடியாக டாக்டரிடம் சென்று, சிகிச்சை பெறும்படி சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.