மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4
பெங்களூரு : துப்புரவு தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்களின் சீருடை மாற்றப்பட்டுள்ளது.பெங்களுரு மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு, தற்போது பச்சை நிற சீருடை வழங்கப்பட்டுள்ளது. இதன் நிறத்தை மாற்றும்படி, பலமுறை மாநகராட்சி கமிஷனரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதன் சாதகம், பாதகங்களை ஆராய்ந்த கமிஷனர், தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று, சீருடை நிறத்தை மாற்றியுள்ளார். பச்சை நிறத்துக்கு பதிலாக, நீல நிற சீருடை வழங்கப்படுகிறது.மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் அளித்த பேட்டி:மாநகராட்சியில் பணியாற்றும், 17,000 துப்புரவு தொழிலாளர்களுக்கு, புதிய சீருடை வழங்கப்படும். மகளிர் தொழிலாளர்களுக்கு இரண்டு ஜோடி சேலைகள், தொப்பி, ஸ்வெட்டர், ஒரு கோட் வழங்கப்படும். இதற்காக ஒருவருக்கு தலா, 4,877 ரூபாய் நிர்ணயிக்கப்படும்.ஆண் தொழிலாளர்களுக்கு, ஒரு டிராக் பேன்ட், டி - ஷர்ட், தொப்பி வழங்கப்படும். இதற்கு 3,578 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீருடை வினியோகிக்க, டெண்டர் அழைத்துள்ளோம். ஆகஸ்ட் 15ல், அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் புதிய சீருடை கிடைக்கும். அன்றிலிருந்தே அவர்கள் புதிய சீருடை அணிந்து பணியாற்றுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 4