மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
பெங்களூரு: போலீசாரின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, பெங்களூரு கமிஷனர் தயானந்தா நடவடிக்கை எடுத்து வருகிறார்.இது குறித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது:நிச்சயமில்லாத பணி நேரம், சரியான நேரத்துக்கு உணவருந்தாதது, கடுமையான நெருக்கடி, தரமற்ற வாழ்க்கை முறையே, போலீசாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்க காரணம். போலீஸ் துறையில் 15 முதல் 20 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தற்போதுள்ள போலீசாருக்கு, பணி நெருக்கடி அதிகரித்துள்ளது.போலீசார், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்து, பணியாற்றுகின்றனர். இது மனநிலையை பாதிக்கிறது. குற்றங்கள், கொலைகள் நடக்கும் போது, பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது, போலீசார் கால, நேரம் பார்க்காமல் தங்களின் ஷிப்ட் நேரத்தை தாண்டி பணியாற்றுகின்றனர். பாதுகாப்புக்கு செல்லும் இடங்களில், கொடுக்கும் உணவை சாப்பிடுகின்றனர். பல நேரங்களில் உணவு தரமாக இருப்பது இல்லை.பசியை போக்க உடனடியாக கிடைக்கும் ஜங்க் புட் சாப்பிடுகின்றனர். இரவு ஷிப்டிலும் பணியாற்றுகின்றனர். சில போலீசார், மன அழுத்தத்தை நிவர்த்தி செய்ய, மதுபானத்தை நாடுகின்றனர். இது, அவர்களின் உடல் நிலையை பாதிக்கிறது.போலீசார், தங்கள் உடலை வலுவாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் கட்டாய ஓய்வு பெறும் சட்டத்தை, அசாம் அரசு 2023ல் விதிமுறை வகுத்துள்ளது. இதனால் போலீசாரின் குடும்பங்களுக்கு, வாழ்க்கை பாதுகாப்பு கிடைக்காமல் போகும். எனவே கர்நாடகாவில் இத்தகைய விதமுறை கொண்டு வர, அரசு ஆலோசிக்கவில்லை. தண்டனை எப்போதும் பிரச்னைக்கு தீர்வாக இருக்காது.உடல் ஆரோக்கியம் குறித்து, போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு வழி காண்பிக்க வேண்டும். சில அதிகாரிகள் வயது ஏற, ஏற மனநிலை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு கவுன்சலிங் வசதி செய்யப்படும்.பெங்களூரின் 16,296 போலீசார், உடல்நல பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர். இவர்களை வலுப்படுத்த போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது. பணி நெருக்கடியை குறைக்க, வார விடுமுறை கட்டாயம். வார விடுமுறையில் பணியாற்றினால், மறுநாளே விடுமுறை பெற வேண்டும் என்ற விதிமுறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1