மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
8 hour(s) ago | 7
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
9 hour(s) ago | 1
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
9 hour(s) ago | 8
ஹாசன், : ''லோக்சபா தேர்தல் முடிந்த பின், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தானாகவே கவிழும்,'' என ம.ஜ.த., முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கு பின்னும், நான் உயிருடன் இருப்பேன். ஆனால் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்காது. தேர்தல் முடிந்த பின், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தானாகவே கவிழும்.பெண்களுக்கு எதிராக என் மகன் குமாரசாமி, எதுவும் பேசவில்லை. இவரை எதிர்த்து மாநிலம் முழுதும் நடக்கும் போராட்டத்தை, நான் கண்டிக்கிறேன். பெண்களை அவர் அவமதிக்கவில்லை. அவர் பேசியதை அரசியல் நோக்கத்துக்காக மாற்றி உள்ளனர்.குமாரசாமியை பற்றி காங்கிரஸ் தலைவர்கள், பொய்யாக அவப்பிரசாரம் செய்கின்றனர். முதல்வராக குமாரசாமி செயல்படுத்திய திட்டங்கள், அனைத்து வர்க்கத்தினருக்கு உதவியாக இருந்தது.என்னாலும் சிவகுமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவரது இமேஜுக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியும். இந்த வயதில் அதை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. சோனியா, தனது கட்சி மற்றும் அன்றைய காங்கிரஸ் அரசின் மத்திய அமைச்சர்களை கட்டுப்படுத்தினார்.இவ்வாறு அவர்கூறினார்.
8 hour(s) ago | 7
9 hour(s) ago | 1
9 hour(s) ago | 8