உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர்கள் ராஜினாமா செய்ய காங்., - எம்.எல்.ஏ., விருப்பம்

அமைச்சர்கள் ராஜினாமா செய்ய காங்., - எம்.எல்.ஏ., விருப்பம்

தாவணகெரே: “லோக்சபா தேர்தலில், கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்காத அமைச்சர்கள், ராஜினாமா செய்ய வேண்டும்,” என, சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவகங்கா பசவராஜ் வலியுறுத்தினார்.தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், எந்த அமைச்சர் தன் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிக ஓட்டுகள் பெற்றுத் தர முடியவில்லையோ, அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள். அவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முடியாத அமைச்சர்கள் மீது, ராகுலும், மூத்த தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு கட்சி முக்கியமே தவிர, நபர் அல்ல. எனவே இத்தகைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.முக்கியமான திட்டங்களை செயல்படுத்தியும், கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. எம்.எல்.ஏ.,க்களும், தொண்டர்களும், இரவு, பகலாக உழைத்து அந்தந்த தொகுதிகளில் அதிக ஓட்டுகள் கிடைக்க செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ