உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசை அழிக்க முடியாது! சாம்ராஜ் நகர் எம்.பி., உறுதி

காங்கிரசை அழிக்க முடியாது! சாம்ராஜ் நகர் எம்.பி., உறுதி

சாம்ராஜ் நகர் : ''காங்கிரசை யாராலும் அழிக்க முடியாது,'' என, சாம்ராஜ் நகர் காங்கிரஸ் எம்.பி., சுனில் போஸ் தெரிவித்தார்.சாம்ராஜ் நகர் மாவட்டம், அம்பேத்கர் மைதானத்தில் நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:சமீபத்தில் நடந்த லோக்சபா கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்கும் வேலையை, 'இண்டியா' கூட்டணி கட்சியினர் செய்துள்ளனர். மத்தியில் நாங்கள் பலத்துடன் இருக்கிறோம்.தேர்தலில் நான் போட்டியிட்டபோது, பலரும் விமர்சித்தனர். ஆனால் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள், தொண்டர்களின் பணியால், வெற்றி பெற்றேன். காங்கிரசை யாராலும் அழிக்க முடியாது.எனக்களித்த வெற்றியை பொறுப்புடன் பணியாற்றி, அனைவரின் நம்பிக்கைக்கு துணையாக நிற்பேன். பெண்களுக்கான வாக்குறுதித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால், காங்கிரசை பெண்கள் ஆதரித்துள்ளனர். இத்தேர்தலில் பா.ஜ.,வுக்கு மக்கள் தகுந்த பதில் அளித்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ