உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., உட்கட்சி பூசல்; பா.ஜ., பாய்ச்சல்

காங்., உட்கட்சி பூசல்; பா.ஜ., பாய்ச்சல்

பெங்களூரு: 'காங்கிரசில் முதல்வர், துணை முதல்வர் பதவிக்காக, முட்டி மோதுகின்றனர்' என பா.ஜ., விமர்சித்துள்ளது.'எக்ஸ்' சமூக வலைதளத்தில், நேற்று பா.ஜ., கூறியிருப்பதாவது:லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், காங்கிரஸ் அரசின் நிலை, வீடு ஒன்று; வாசல் நுாறு போன்றாகி விட்டது. முதல்வர், துணை முதல்வர் பதவிக்காக முட்டி மோதுகின்றனர். நீறு பூத்த நெருப்பாக இருக்கும் உட்கட்சி பூசல், எந்த நேரத்திலும் ஜுவாலையாக வெடித்து சிதறலாம்.காங்கிரசின் உட்கட்சி பூசலால், மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளது. இத்தனை நாட்களாக நின்றிருந்த மூன்று துணை முதல்வர்கள் நியமன விஷயம், லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் முன்னிலைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, மூன்று துணை முதல்வர்கள் வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின் நாற்காலி இழுபறி நிற்பது எப்போது. கர்நாடக வளர்ச்சிக்கு கிரஹணம் முடிவது எப்போது என்பதை கூறுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை