உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எமர்ஜென்சியை அமல்படுத்திய காங்கிரஸ் ராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும்: அசோக்

எமர்ஜென்சியை அமல்படுத்திய காங்கிரஸ் ராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும்: அசோக்

பெங்களூரு, : ''நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தி, அரசியல் சாசனத்தை அவமதித்த காங்கிரசும், எம்.பி., ராகுலும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்தார்.நாட்டில் எமர்ஜென்சி அமலாகி, 30 ஆண்டுகளாவதை ஒட்டி, மாநில பா.ஜ., சார்பில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அசோக் பேசியதாவது:அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை, மூலையில் தள்ளி, சர்வாதிகாரப் போக்கில் காங்கிரசும், இந்திராவும் இரவோடு இரவாக எமர்ஜென்சியை அமல்படுத்தினர்.நீதித்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. பத்திரிகையாளர்கள், வாஜ்பாய், அத்வானி உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.அப்போது நான், வி.வி., புரா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.யு., படித்து வந்தேன். யஷ்வந்த்பூரில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், இந்திராவுக்கு எதிராக கோஷம் எழுப்பினேன். அப்போது யஷ்வந்த்பூர் போலீசார், என்னை கைது செய்து, சித்ரவதை செய்தனர்.

ஆர்.எஸ்.எஸ்.,

எங்கள் குடும்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களும் தலைமறைவாக வேண்டியிருந்தது. ஒரு மாதம் சுதந்திர பூங்கா சிறையில் இருந்தேன். 200 பேருக்கு ஒரு கழிப்பறை இருந்தது. உணவு கூட வழங்கவில்லை. அந்த கஷ்டங்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. மக்களை துன்புறுத்திய காங்கிரஸ், தற்போது ஆட்சியில் உள்ளது.அரசியல் சட்டத்தை அவமதித்த காங்கிரஸ் கட்சியினர், எப்படி மக்களிடம் செல்கின்றனர் என்பது புரியவில்லை. ராகுலுக்கு கவுரவம், கண்ணியம் இருந்தால், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

குற்றச்சாட்டு

அரசியல் சட்டத்தை பா.ஜ.,வினர் மாற்றவுள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். அரசியலமைப்பு சட்டம், நமக்கு, பகவத் கீதைக்கு சமம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆனால், அரசியல் சட்டத்தை காங்கிரஸ் மாற்றிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ