உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணத்தை இந்தியர்களுக்காக காங்கிரஸ் செலவிடும்: சொல்கிறார் ராகுல்

பணத்தை இந்தியர்களுக்காக காங்கிரஸ் செலவிடும்: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'காங்கிரஸ் எங்கு ஆட்சியில் இருந்தாலும், இந்தியாவின் பணத்தை இந்தியர்களுக்காக செலவிடும். முதலாளிகளுக்கு அல்ல என்பது எங்கள் வாக்குறுதி' என காங்., எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலுங்கானா விவசாய குடும்பங்களுக்கு வாழ்த்துகள். 40 லட்சத்துக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களை கடனில் இருந்து விடுவிக்கும் 2 லட்சம் ரூபாய் வரையிலான, அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து, காங்கிரஸ் அரசு ஒரு வரலாற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயிகள்

எதைச் சொன்னாலும் அதைச் காங்கிரஸ் அரசு செய்து காட்டும். இதுவே என் எண்ணமும், என் பழக்கமும் ஆகும். காங்கிரஸ் அரசு என்பது விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும். அதற்கு தெலுங்கானா அரசின் இந்த முடிவு உதாரணம். காங்கிரஸ் எங்கு ஆட்சியில் இருந்தாலும், இந்தியாவின் பணத்தை இந்தியர்களுக்காக செலவிடும். முதலாளிகளுக்கு அல்ல என்பது எங்கள் வாக்குறுதி. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Sivasankaran Kannan
ஜூன் 25, 2024 19:02

உதவாத புள்ளி கூட்டணி.. அதற்கு இந்த கோமாளி ஒரு தலைவன்..


இராம தாசன்
ஜூன் 25, 2024 16:10

அப்போ முதலாளிகள் இந்தியர்கள் இல்லையா?


Lion Drsekar
ஜூன் 25, 2024 14:36

கட்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். தேர்தல் நேரத்தில் ஊரெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி கொடிகள் எல்லாம் கொடிக்குக் கொடி ஒருவிதம் இரவு பகல் என்று எதுவுமில்லை இவர்களுக்கு தேவையோ பதவி பதவி பதவி வந்தே மாதரம்


ArGu
ஜூன் 25, 2024 14:04

ஓ அப்ப இத்தன நாளா ..


M S RAGHUNATHAN
ஜூன் 24, 2024 21:02

முதலில் நேஷனல் ஹெரால்டு, associate journals சொத்துக்களை அரசிடம் சொல்லி நீதி மன்றம் மூலம் விற்றுவிட்டு நீதி மன்றம் மூலம் பகிர்ந்து தரவும். வரும் பணத்தை சோனியா, பிரியங்கா, ராபர்ட், அவர்கள் குழந்தைகள், நீங்கள் பிரித்து எடுத்துவிட்டு மக்களுக்கு எம் மக்களுக்கு கொடுத்து விட்டேன் என்று பறை சாற்றவும்.


Mohan
ஜூன் 24, 2024 18:05

வருமான வரி மற்றும் இதரவரிகளை செலுத்தும் ""சாலரீட் கிளாஸ்"", மக்கள், நிறுவனங்களில் கைவிரல தேய முட்டி ஒடிய வேலை செய்து சம்பாதித்த பணத்தில் வருமான வரி பிடித்தம் செய்து பாக்கி தரப்படும் நடுத்தர வேலை பார்க்கும் மக்கள்


nagendhiran
ஜூன் 24, 2024 17:46

வங்கியில் கடன் வாங்கியா விவசாயிகள் விவசாயம்"செய்கிறார்கள்? சிறு விவசாயிகள் அப்படி செய்வதில்லை? அவர்கள் வியாபாரிகளிடம்"முன் பணம் பெற்றே விவசாயம் செய்கிறார்கள்


Gopi
ஜூன் 24, 2024 12:58

யார் அம்மா ஊட்டு பணம் ?


Sivasankaran Kannan
ஜூன் 24, 2024 08:43

இந்த கொசு சுத்தமாக அறிவில்லாமல் உளறி கொட்டி வருகிறது.. இவர்களுக்கும் ஓட்டு போடும் ஒரு மந்தை..


ச.பாலசுப்பிரமணியன்
ஜூன் 23, 2024 14:02

தள்ளுபடி, இலவசங்களைத் தவிர திட்டங்கள் ஏதும் இல்லையா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை