மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
கொப்பால்: கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, கர்நாடகாவில் இருந்து, திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, கன்னட வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தலைமையில் காங்கிரசார் கடிதம் எழுதி உள்ளனர்.'மூடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்ததை கண்டித்து, காங்கிரசார் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, கொப்பாலில் நேற்று, கன்னட வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அப்போது, கவர்னரை கர்நாடகாவில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதும் இயக்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.இதன் பின், அங்கிருந்த காங்., தொண்டர்கள், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினர்.அப்போது, அமைச்சர் சிவராஜ் தங்கடகி பேசியதாவது:கர்நாடகாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், கட்சி பாரபட்சம் பார்க்கிறார். தனக்கு கவர்னர் பதவியை தந்த பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே அவரை உடனடியாக கர்நாடகாவில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். கொப்பாலில் இருந்து, ஜனாதிபதிக்கு அதிகபட்ச கடிதங்கள் செல்ல வேண்டும்.ஜனாதிபதியின் பிரதிநிதியாக திகழும் கவர்னர், அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படுகிறார். இனி ஜனாதிபதி தான் அரசியலமைப்பை காக்க வேண்டும்.நல்லாட்சி செய்து வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ.,வுடன் சேர்ந்து, கவர்னரும் சூழ்ச்சி செய்து வருகிறார். கர்நாடகாவில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து வருவதை, பா.ஜ., தலைவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
1 hour(s) ago