உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுராவில் ரோப் கார் அமைக்கும் பணி நிறைவு

மதுராவில் ரோப் கார் அமைக்கும் பணி நிறைவு

மதுரா:உத்தர பிரதேசத்தின் மதுரா ராதா ராணி கோவிலில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. ஜென்மாஷ்டமி நாளில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உ.பி., மாநிலம் மதுராவில் 600 அடி உயரத்தில் உள்ள ராஜா ராணி மலைக் கோவில் அமைந்துள்ளது. மலை ஏறிச்செல்ல ஏராளமான -பக்தர்கள் சிரமப்பட்டதால் இங்கு ரோப் கார் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. தற்போது பணிகள் நிறைவடைந்து விட்டன.இதையடுத்து, பிரஜ் தீர்த்த விகாஸ் பரிஷத் நிர்வாகிகள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தனர். அப்போது, மதுராவில் ரோப் கார் சேவையை துவக்கி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.எனவே, ஜென்மாஷ்டமி நாளில் மதுராவில் ரோப் கார் சேவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ