உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

பெண் விவசாயி தற்கொலைவிஜயபுரா, பபலேஸ்வராவின், அர்ஜுனகி கிராமத்தில் வசித்தவர் விவசாயி ருக்மவ்வா துன்டப்பா பாடகி, 50. இவர் பயிரிடும் நோக்கில் பல இடங்களில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதை அடைக்க முடியாமல், அவதிப்பட்ட அவர், நேற்று மதியம் கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.மகள் பலாத்காரம்தந்தை ஓட்டம்துமகூரு, திப்துாரில் 13 வயது சிறுமி, குடும்பத்துடன் வசிக்கிறார். சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில், தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த தாய், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் பதிவானதும் தந்தை தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.தந்தை உயிரிழப்பு மகன் தற்கொலைதாவணகெரே, ஹொன்னாளியின், சீலாபுரா கிராமத்தில் வசித்தவர் சந்திர நாயக், 66. இவரது மகன் சிவகுமார், 32. மாற்றுத்திறனாளியான இவரை, தந்தையே பராமரித்தார். சில நாட்களுக்கு முன், தந்தை காலமானார். இதனால் மனம் வெறுத்த சிவகுமார் நேற்று விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.கோவிலில் திருட்டுஉடுப்பி, பைலுாரில் துாமாவதி கோவில் உள்ளது. நேற்று அதிகாலை பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம கும்பல் உண்டியலை உடைத்து 50,000 ரூபாயை திருடிக்கொண்டு தப்பியது். காலை அர்ச்சகர் வந்து பார்த்த போது, திருட்டு நடந்தது தெரிந்து போலீசாரிடம் புகார் அளித்தார்.ரயிலில் கிடந்த பெண் உடல் விஜயநகரா, ஹொஸ்பேட் ரயில் நிலையம் அருகில், பழுதடைந்த ரயில் பெட்டி நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் உடல், அழுகிய நிலையில் கிடந்தது. இதை கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை