உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

மாமியாரை கொன்ற மருமகன்சித்ரதுர்கா ஹொசதுர்கா ஷிரானகட்டே கிராமத்தில் வசித்தவர் கெஞ்சம்மா, 54. இவரது மகன் லாவண்யா, 28. இவரின் கணவர் சேஷப்பா, 30. மாமியார், மருமகன் இடையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இரவு கெஞ்சம்மாவை கத்தியால் குத்தி, சேஷப்பா கொன்றார். அவரை ஹொசதுர்கா போலீசார் கைது செய்தனர்.டாக்டரை தாக்கி கொள்ளைமேற்கு வங்க மாநிலம் 24 பர்கனாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர் நாராயண் மண்டல், 50; டாக்டர். கலபுரகி வாடியில் எட்டு ஆண்டுகளாக கிளினிக் நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு கிளினிக்கில் புகுந்த மர்ம நபர்கள் சிலர், வேறு மாநிலத்தில் இருந்து வந்து இங்கு கிளினிக் நடத்த, எங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டு உள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால் சங்கர் நாராயண் மண்டலை தாக்கிவிட்டு, 13,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.மனைவியை கொன்ற கணவர் கைதுபெங்களூரு காமாட்சிபாளையாவில் வசித்தவர் திவ்யா, 30. இவரது இரண்டாவது கணவர் சாந்தகுமார், 35. கடந்த 7 ம் தேதி திவ்யாவை கொன்று விட்டு, சாந்தகுமார் தலைமறைவானார். நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இன்னொருவருடன் தொடர்பில் இருந்ததால், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.விபத்தில் இருவர் பலிஉத்தர கன்னடா ஜோய்டா ராம்நகரில் வசித்தவர்கள் கரண் நம்பியார், 27, மஞ்சுநாத், 29. நண்பர்களான இருவரும் நேற்று மதியம், ராம்நகரில் இருந்து ஜகல்பேட் என்ற ஊருக்கு பைக்கில் சென்றனர். கட்டுப்பாட்டை இழந்த பைக், மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. துாக்கி வீசப்பட்ட இருவரும் இறந்தனர்.16 பேர் மீது வழக்குகொப்பால் கங்காவதி வித்தலாபுரா கிராமத்தின் லட்சுமி, 20. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த மாதம் 30 ம் தேதி பிரசவத்திற்காக, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின் போது லட்சுமியும், குழந்தையும் இறந்தனர். டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லட்சுமி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் லட்சுமியும், குழந்தையும் இறந்தது பற்றி அறிந்ததும், மருத்துவமனையில் இருந்த பொருட்களை உடைத்ததுடன், யமனம்மா என்ற பெண் ஊழியரை தாக்கியதாக, லட்சுமி உறவினர்கள் மீது டாக்டர் காவேரி போலீசில் புகார் அளித்தார். அதன்படி 16 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை