உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லை தாண்டிய ஜிஹாதிகள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கின்றன

எல்லை தாண்டிய ஜிஹாதிகள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கின்றன

தியோரியா : “ஓட்டு ஜிஹாத்துக்கு வேண்டுகோள் விடுக்கும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு, எல்லை தாண்டிய ஜிஹாதிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர்,” என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தின் பான்ஸ்கான், தியோரியா தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஓட்டு சேகரித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:'இண்டியா' கூட்டணியில் உள்ள கட்சிகள், நாட்டின் வளர்ச்சியை விரும்பவில்லை. மாறாக, அதை பல நுாறு ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றன. காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள், பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளிப்பதற்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. இவ்வாறு ஓட்டு ஜிஹாத் செய்ய வேண்டு கோள் விடுக்கும் இந்த இரு கட்சிகளுக்கு எல்லை நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற பாகிஸ்தானில் பிரார்த்தனை செய்யப்படுகின்றன. அரசியல் சாசனத்துக்கு எதிராக மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அவர்கள் நினைக்கின்றனர். அதை எதிர்க்கும் நான் விமர்சனத்துக்கு ஆளாகிறேன். நாட்டின் பாதுகாப்புடன் எப்போதும் விளையாடும் காங்கிரஸ், பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விரும்பும் நாடுகளுக்கு தடையை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் தங்கள் ஆயுத பேரங்கள் தொடர வேண்டும். தரகு வேலைகளும், மோசடிகளும் நீடிக்க வேண்டும் என இண்டியா கூட்டணி விரும்புகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதிக்குப் பின், நம் நாடு புதிய பயணத்தை துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்