வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
43 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
54 minutes ago
புதுடில்லி: புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, 84, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ஆந்திராவின் சித்துாரில் உள்ள மதனப்பள்ளியில் பிறந்த யாமினி, சிறு வயது முதலே பரத நாட்டிய கலையில் சிறந்து விளங்கினார். சிதம்பரத்தில் வளர்ந்த இவர், சென்னையில் உள்ள கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 5 வயது முதல் நடனமாடத் துவங்கினார். குச்சிப்புடி, ஒடிசி போன்ற நடனக் கலைகளில் தேர்ச்சி பெற்று, தன் கலையார்வத்தை விரிவுபடுத்திய யாமினி, கர்நாடக இசை மற்றும் வீணை இசையிலும் சிறந்து விளங்கினார். கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த யாமினி, டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
43 minutes ago
54 minutes ago