| ADDED : ஆக 16, 2024 11:00 PM
பெங்களூரு : பெங்களூரின் பல ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இத்தகைய அபாயமான ரோடுகளை அடையாளம் கண்டு, மாநகராட்சிக்கு போக்குவரத்து போலீசார் அறிக்கை அளித்துள்ளனர்.பெங்களூரில் ரோடுகள் நாளுக்கு நாள் சீர் குலைகின்றன. சில நாட்களாக பெய்யும் மழையால், ஆங்காங்கே ரோடுகளில் நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அவதிப்படுகின்றனர். மழை நீர் ரோடு பள்ளங்களில் நிரம்புகிறது. வாகன பயணியர் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கும் சூழ்நிலை உள்ளது. கவனம் தவறினால் விபத்தில் சிக்கி காயமடைய நேரிடும்.மழை பெய்யும் போது, சாலைகளில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழும் போது, விரைந்து உதவிக்கு வருவது போலீசார்தான். மாநகராட்சிக்கு தெரியாத அபாயமான இடங்களை பற்றி போலீசாருக்கு அதிகம் தெரியும்.பெங்களூரில் இத்தகைய அபாயமான 180 இடங்களை போக்குவரத்து போலீசார் அடையாளம் கண்டு, மாநகராட்சிக்கு அறிக்கை அளித்துள்ளனர். இந்த அறிக்கையில், 'பெங்களூரில் அதிக மழை பெய்தால், ரோடுகள், சுரங்கப்பாதைகள் ஏரிகளை போன்று மாறுகின்றன. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்று 180 அபாயமான இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். இந்த ரோடுகளில் பள்ளங்களை மூடி விபத்தை தவிர்க்க வேண்டும். மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.....புல் அவுட்....மழை அசம்பாவிதங்கள் ஏற்படும் இடங்கள் குறித்து, போக்குவரத்து போலீசார் அறிக்கை அளித்துள்ளனர். இந்த இடங்களை ஆய்வு செய்யும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இங்கு அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்.- துஷார் கிரிநாத், தலைமை கமிஷனர், பெங்களூரு மாநகராட்சி***