மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 5
பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ளது காஞ்சிரப்புழை. வன எல்லையான இங்குள்ள பூஞ்சோலை மாந்தோன்னி பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதை நேற்று அப்பகுதி மக்கள் கண்டனர். காஞ்சிரப்புழை வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தையை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.வனத்துறை அதிகாரி கூறுகையில், 'இறந்த சிறுத்தைக்கு 5 வயது இருக்கலாம். இறந்து பல நாட்களானதால், உடல் அழுகி உள்ளது. அதனால், இறந்த சிறுத்தை ஆணா, பெண்ணா என்பது குறித்து தெரியவில்லை. வனத்துறை மருத்துவர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட பிறகே, சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரிய வரும்' என்றார்.
1 hour(s) ago
7 hour(s) ago | 5