உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடன் வாங்கிய மின்சாரம் திரும்ப வழங்க முடிவு

கடன் வாங்கிய மின்சாரம் திரும்ப வழங்க முடிவு

பெங்களூரு : ''கர்நாடக மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, பஞ்சாப், உத்தர பிரதேசத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, ஜூன் 16 முதல் இவ்விரு மாநிலங்களுக்கும் மின்சாரம் திருப்பி வழங்கப்படும்,'' என மின் துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. அத்துடன் கடந்தாண்டு ஆகஸ்டில் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் நீர் மின் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.போதிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. மேலும், அனல் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி குறைந்ததால், மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.எக்காரணத்தை கொண்டும் மின்தடை செய்யக் கூடாது என்று முதல்வர் சித்தராமையா கூறினார். இதையடுத்து, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.ஒப்பந்தப்படி, 2023 அக்டோபர் முதல் 2024 மே வரை, உத்தர பிரதேசத்தில் இருந்து தினமும் 300 முதல் 600 மெகாவாட் மின்சாரமும்; 2023 நவம்பர் முதல் 2024 மே வரை பஞ்சாப்பில் இருந்து தினமும் 500 மெகாவாட் மின்சாரமும் வாங்கப்பட்டது. ஜூன் 16ம் தேதி முதல் இவ்விரு மாநிலங்களுக்கும் மின்சாரம் திருப்பி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை