| ADDED : ஜூன் 15, 2024 01:34 AM
புதுடில்லி:பெண்கள், சிறுமியருக்கான தற்காப்பு கோடைகால முகாம் நிறைவடைந்தது.பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் காவல் துறை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக பெண்கள் மற்றும் சிறுமியருக்காக டில்லி காவல்துறை தற்காப்பு கோடைகால முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இப்பயிற்சியில் மொத்தம் 12,327 மாணவிகள் கலந்துகொண்டதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான மேரி கோம் தலைமையில், 20வது தற்காப்பு கோடைக்கால முகாமின் நிறைவு விழா நடந்தது.