உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யமுனை ஆற்றில் உரிய பங்கு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் டில்லி வழக்கு

யமுனை ஆற்றில் உரிய பங்கு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் டில்லி வழக்கு

புதுடில்லி:“மாநிலத்துக்கு யமுனை ஆற்றில் வழங்க வேண்டிய நீரை வழங்காத ஹரியானா அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்படும்,” என, மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி அறிவித்துள்ளார்.கோடை வெயில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேசிய தலைநகர் பிராந்தியத்தை சுட்டெரிக்கிறது. வெப்பம், வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் நீர் நிலைகள் வறண்டுவிட்டன.இதுபோதாதென்று, உரிய பங்கைத் தராமல் ஹரியானா அரசும் வஞ்சிப்பதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது.தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், தண்ணீரை வீணாக்கினால் 2,000 ரூபாய் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மாநில அரசு அறிவித்துள்ளது.இந்த நிலையில், வெப்ப அலைக்கு மத்தியில் நகரம் எதிர்கொள்ளும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க டில்லி அரசு நேற்று அவசரக் கூட்டத்தை கூட்டியது.இந்த கூட்டத்தில் மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி, சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் தலைமைச் செயலர், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆதிஷி கூறியதாவது:தண்ணீர் பற்றாக்குறையால் மாநிலம் ஒரு அவசர சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடியை சமாளிக்கத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.யமுனை ஆற்றில் நம் மாநிலத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இன்றே (நேற்று) வழக்கு தொடரப்படும்.குடிநீர் வாரியத்தில் டேங்கர் லாரி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது. இதை ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிர்வகிப்பார். டேங்கர் லாரி தண்ணீர் தேவைப்படும் மக்கள், 1916 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியும். தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக தண்ணீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்த தொலைபேசி எண்ணும் கட்டுப்பாட்டு அறையும் வரும் ஜூன் 5ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. 11 மண்டலங்களில் கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள், உதவி ஆட்சியர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் ஹாட்ஸ்பாட்களில் நிலைமையை மதிப்பீடு செய்து டேங்கர் லாரிகளை அனுப்புவர்.தவிர ஆழ்துளைக்கிணறுகள் தொடர்பான புகார்களை கையாள குடிநீர் வாரியத்தில் மின்துறையில் தனிக்குழுக்கள் அமைக்கப்படும்.தண்ணீர் பயன்பாட்டை கண்காணிக்க ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தண்ணீர் வீணாவதை கண்காணிக்கவும் அபராதம் வசூலிக்கவும் இந்த குழுக்கள் நடவடிக்கை எடுக்கும்.நாளை (இன்று) முதல் கட்டுமானப் பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் மாநகராட்சி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்.கார்களை கழுவுவதற்கும், கார் சேவை மையங்களில் குடிநீரைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த மையங்களை மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஆய்வு செய்து, தடையை மீறுவது கண்டறியப்பட்டால், சீல் வைக்கப்படும்.தண்ணீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.நாங்கள் அவசர சூழ்நிலையில் இருக்கிறோம். கோடை மற்றும் யமுனை ஆற்றில் டில்லியின் பங்கு தண்ணீரை ஹரியானா விடுவிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அதிரடி முடிவுகள்

* ஹரியானாவுக்கு எதிராக வழக்கு* டேங்கர் தண்ணீருக்காக 1916* ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் 20 குழு* 11 மண்டலங்களில் கூடுதல் ஆட்சியர்* கட்டுமான பணிகளில் குடிநீர் பயன்படுத்த தடை* மாநகராட்சி ஆய்வு செய்ய உத்தரவு* கார் கழுவ குடிநீர் பயன்படுத்த தடை* மாசுக்கட்டுப்பாட்டு குழுக்களுக்கு பொறுப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி