உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவகுமாரை எதிரியாக பார்க்கும் தேவகவுடா 

சிவகுமாரை எதிரியாக பார்க்கும் தேவகவுடா 

ராம்நகர்: ''துணை முதல்வர் சிவகுமாரை, முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், அவரது குடும்பத்தினரும் எதிரியாக பார்க்கின்றனர்,'' என, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கூறியுள்ளார்.ராம்நகரில் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் நேற்று அளித்த பேட்டி:முதல்வர் பதவியில் இருந்து தன்னை இறக்கியவர்களுடன், ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு குமாரசாமி சென்றதால், அதை எதிர்த்து துணை முதல்வர் சிவகுமார் கேள்வி எழுப்பினார். இதில் என்ன தவறு உள்ளது?துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். அனைத்து சமூகத்தையும் ஒன்றாக பார்க்கும் பொறுப்பு, அவர் மீது உள்ளது. குமாரசாமி அரசியலுக்காக ஏதேதோ பேச கூடிய நபர். அவர் சொல்வது எல்லாம் உண்மையாகி விடுமா?தேவகவுடாவும், அவரது குடும்பத்தினரும் சிவகுமாரை எதிரியாக பார்க்கின்றனர். நாங்கள் அவர்களை எதிரியாக நினைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஏதாவது கருத்து கூறினால், அது தவறாகிவிடும். தேர்தல் முடிந்ததும் பேச வேண்டியது நிறைய உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ