உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவராஜ் கவுடா பைத்தியம் சிவராமே கவுடா ஆவேசம்

தேவராஜ் கவுடா பைத்தியம் சிவராமே கவுடா ஆவேசம்

பெங்களூரு: தேவராஜ் கவுடா பைத்தியம் பிடித்த நாய். அவர் ரோல் காலர்,'' என, பா.ஜ., முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா தெரிவித்தார்.ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ பென் டிரைவ் வெளிச்சத்துக்கு வந்து, பெரும் சூறாவளியை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ வெளியானதில், துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் பா.ஜ., - எம்.பி., சிவராமே கவுடாவுக்கு தொடர்புள்ளதாக, பா.ஜ., பிரமுகரும், வக்கீலுமான தேவராஜ் கவுடா குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து, சிவராமே கவுடா கொதித்தெழுந்துள்ளார்.நேற்று அவர் கூறியதாவது:வக்கீல் தேவராஜ் கவுடா பைத்தியம் பிடித்த நாய்; ரோல் காலர். தன்னை சிவகுமாருடன் பேச வைக்கும்படி, என்னிடம் கேட்டார். நானும் ஏப்ரல் 29 மற்றும் 30ல், சிவகுமாரை சந்திக்க ஏற்பாடு செய்தேன்.தேவராஜ் கவுடாவிடம் ஐந்து மொபைல் போன்கள் உள்ளன. நான் பேசுவதை ரிக்கார்டு செய்வார் என, நான் நினைக்கவில்லை. வீடியோக்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றுவதில், அவர் எக்ஸ்பர்ட்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ