மேலும் செய்திகள்
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
4 hour(s) ago | 38
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்
7 hour(s) ago | 4
பார்லியில் குரங்கு தொல்லை; சபாநாயகர் திண்டாட்டம்
13 hour(s) ago | 19
ஹாசன் : ஹாசன் ம.ஜ.த.,வின் கோட்டையை தகர்க்க முதல்வர் சித்தராமையா தீவிரம் காட்டி வரும் வேளையில், தனது பேரனை வெற்றி பெற வைக்கும் முயற்சியில், 90 வயதிலும் தேவகவுடா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ள ம.ஜ.த.,வின் கோட்டையான ஹாசனில், இரண்டாவது முறையாக பேரன் பிரஜ்வலை, முன்னாள் பிரதமர் தேவகவுடா நிறுத்தி உள்ளார்.பிரஜ்வல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா அதிருப்தி அடைந்தார். அவரை கட்சி மேலிட பொறுப்பாளர் சந்தித்து வேறு மாவட்ட தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டது.அவ்வப்போது பிரசாரத்தில் கூட்டணி வேட்பாளர் என்று மட்டும் கூறும் பிரீத்தம் கவுடா, பிரஜ்வலை பெயரை மறந்தும் கூட சொல்லவில்லை. இதை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரேயஷ் படேலை நிறுத்தியுள்ளது. ஹாசன் ம.ஜ.த.,வின் கோட்டை என்பதை உடைத்து, காங்கிரஸ் வெற்றி பெறும் சித்தராமையா சவால் விடுத்திருந்தார். இதை உடைக்கும் வகையில், ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, 90 வயதிலும் ஹாசனில் ஒவ்வொரு தாலுகா, கிராமங்களுக்கு நேரடியாக சென்று, பேரனுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.கடந்த 13 நாட்களாக, அனைத்து தொகுதிகளிலும் தொடர்ந்து தேவகவுடா பிரசாரம் செய்து வருகிறார். ஹாசன் லோக்சபா தொகுதியின் எட்டு சட்டசபை தொகுதியில் நான்கில் ம.ஜ.த., இரண்டில் பா.ஜ., இரண்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
4 hour(s) ago | 38
7 hour(s) ago | 4
13 hour(s) ago | 19