உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சி அடைந்த இந்தியா; 2047ல் உருவாக்குவோம் என பிரதமர் மோடி சூளுரை

வளர்ச்சி அடைந்த இந்தியா; 2047ல் உருவாக்குவோம் என பிரதமர் மோடி சூளுரை

புதுடில்லி: 'வரும் 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்,'' என சுதந்திர உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து, பாரத் மாதா கி ஜே என்று கூறி பிரதமர் மோடி உரையை துவக்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oevty3nw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பேசியதாவது: நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். அவர்கள் தான் நமக்கு சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் உரிமையைப் பெற்றுத்தந்தனர். தியாகம் செய்தவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகிறார்கள்.

அர்ப்பணியுங்கள்!

கடந்த சில ஆண்டுகளாக இயற்கை பேரிடர்களால் துன்பத்திற்கு ஆளாகியுள்ளோம். பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் நாடு துணை நிற்கும். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம். 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

140 கோடி இந்தியர்கள்

காலனி ஆதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகள் இந்தியா சிக்கித் தவித்தது. அடிமைத்தன மன நிலையை கைவிட வேண்டிய தருணம் இது. 40 கோடி இந்தியர்கள் நாட்டின் விடுதலைக்காக போராடினர். அவர்கள் சுதந்திரத்தை நனவாக்கினர். 140 கோடி பேரும் இணைந்து வளர்ந்த இந்தியாவை சாத்தியமாக்குவோம். ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பலன் பெறுகின்றன. சுவாச் திட்டம் மூலமாக இரண்டரை கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து வரும் பரிந்துரைகளும் கருத்துகளும் எனக்கு உத்வேகம் அளிக்கின்றன.

நீதி துறையில் மாற்றம்

நமது நீதித்துறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். 2047ல் வளர்ந்த பாரதம் என்பது வார்த்தைகள் அல்ல. 140 கோடி இந்தியர்களின் உறுதி மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பு. பருவநிலை மாற்றத்திற்கான தீர்வுக்காக உலக நாடுகளே நம்மை எதிர்நோக்கி காத்துள்ளன. நிர்வாக சீர்திருத்தங்கள், விரைவான நீதி, பாரம்பரிய மருத்துவ மேம்பாடு அவசியம்.

துல்லியத் தாக்குதல்

பயங்கரவாதிகளுக்கு எதிராக துல்லியத் தாக்குதலை நடத்தினோம். நாட்டிற்கு வலிமை சேர்க்கவே பல்வேறு துறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறோம். உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

வங்கித்துறை

நமது வலிமையான வங்கித்துறை மாற்றங்களை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. சீர்த்திருத்தங்கள் நாட்டை வலுமைப்படுத்தத்தானே தவிர, பப்ளிசிட்டிக்காக அல்ல. இன்றைய இளைஞர்கள் மெதுவான வளர்ச்சியை விரும்பாமல், அசுர வளர்ச்சியையே விரும்புகிறார்கள். கடந்த கால கலாசாரத்தில் இருந்து ஆட்சியை மாற்றியுள்ளோம். அரசை மக்கள் நாடும் நிலை மாறி, மக்களை அரசே நாடி நலத்திட்டங்களை வழங்குகிறது.

தடைகளை தகர்ப்போம்

அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கு தடையாக உள்ள அனைத்தும் தகர்த்து எறியப்படும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடைய நீதியும், நேர்மையும் சாவி. சாலைகள், ரயில்கள் மற்றும் விமான சேவைகள் முன்னேற்றம் கண்டுள்ளன.புதிய குற்றவியல் சட்டங்கள் நீதித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. விரைவான நீதியை வழங்குவதை புதிய குற்றவியல் சட்டங்கள் உறுதி செய்யும். ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்ய உறுதி பூண்டுள்ளோம்.

சீர்திருத்தம்

மக்களின் வாழ்வை எளிமையாக்க சீர்திருத்தம் என்ற பாதையை தேர்வு செய்துள்ளோம். ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியும். குடிமக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை தரப்படும். மக்களுக்கு சேவையாற்றுவதே எனது குறிக்கோள். சர்வதேச சந்தையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. 3வது முறையாக மக்கள் எங்களை தேர்வு செய்து உள்ளனர். அவர்களுக்கு தலை வணங்குகிறேன். கொரோனா கால பாதிப்புக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திய நாடு இந்தியா.

பெண்கள் பாதுகாப்பு

75 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் கொண்டு வரப்படும். கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறோம். வேளாண் சீர்திருத்தங்களே தற்போதைய தேவை. வரும் நாட்களில் நாட்டை இயற்கை உணவு மையமாக மாற்ற முயற்சி செய்கிறோம். உலகத்தரமான செல்போன்கள் இறக்குமதி என்ற நிலை மாறி, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில், குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி

மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை இந்தியா ஊக்குவிக்கிறது. 2040க்குள் எரிசக்தி உற்பத்தி திறனை உயர்த்த வேண்டும். ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு 140 கோடி மக்கள் சார்பில் வாழ்த்துக்கள். 2036ல் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த தயாராகி வருகிறோம். ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். ஊழல்கள் மூலம் சாமானிய மக்களை கொள்ளையடிக்கும் பாரம்பரியம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தியா புத்தரின் பக்கம் இருக்கிறது. யுத்தத்தின் பக்கம் அல்ல. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர், ஹிந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

K.n. Dhasarathan
ஆக 16, 2024 21:13

2047 லில் வளர்ச்சி அடைந்த இந்தியா என்றால், இப்போ 10 வருடங்களாக என்ன கழட்டப்பட்டது ? பொய் ஜே பி அரசு என்னதான் செய்கிறது ? பெரும் பணக்காரர்கள் ஆடுத்து அதிகாரிகளால் இந்த நாடு சுரன்ட்டப்பட்டுக்கொண்டு வருது, அதற்க்கு இந்த அரசு துணை போகிறது, எப்படி 600 வது இடத்தில் இருந்த அதானி குழுமம் முதல் இடத்திற்கு வந்தது ? பொய்யர்கள் ஆட்சி ? தலை முதல் கால் வரை அனைத்தும் பொய்கள். , இங்கே திருக்குறால் படிப்பது, வடக்கே சென்று தமிழர்கள் ஒரிசா பூரி கோயில் சாவியை எடுத்து சென்று விட்டார்கள் என்று சொல்வது, கபட நாடகம் தானே ?


Priyan Vadanad
ஆக 15, 2024 22:24

nallathu


J.Isaac
ஆக 15, 2024 22:20

மக்களும் மறந்து போவார்கள்..


renga rajan
ஆக 15, 2024 22:11

......


Ms Mahadevan Mahadevan
ஆக 15, 2024 22:03

சும்மா இப்படியே சொல்லி வாய் வலிக்கவில்லை மோடிக்கு. தனி மனித வருமானம் அதால பாதாளத்தில். குடிக்க விவசாயம் செய்ய தண்ணி இல்லை. இவர் வேற ......ஹம்


எஸ் எஸ்
ஆக 15, 2024 18:29

முதலில் ஊழல் வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் வருடக்கணக்காக ஜாமீனிலேயே சௌக்கியமாக இருக்கிறார்கள்


என்றும் இந்தியன்
ஆக 15, 2024 17:14

ஒருக்காலும் ஆகவே ஆகாது உங்களுடைய நடவடிக்கை எடுக்காத தன்மையால். தவறு கண்டேன் சுட்டேன் செத்தான். இந்த சட்டம் கொண்டு வாருங்கள். இந்தியாவை சனாதன தர்மிஸ்தான் என்று அறிவியுங்கள். இந்து எதிர்ப்பாளர்கள் திருட்டு திராவிடர்கள் முஸ்லிம்கள் கிறித்துவர்கள் இந்த தேசத்தில் வாழவேண்டுமென்றால் சனாதன தர்மிஸ்தான் வழியில் செல்லவேண்டும் இல்லையென்றால் அதன் குடியுரிமையை உடனே இழப்பார்கள் என்று சட்டம் கொண்டு வாருங்கள். அடுத்த வருடமே இந்த தேசம் மிக மிக உயர்ந்த நிலைக்கு வரும். அது வரை இந்திய இதே நிலையில் தள்ளாடிக்கொண்டே தான் இருக்கும் இது உறுதி


பாமரன்
ஆக 15, 2024 19:59

இந்த நபர் பெயர் என்றும் என இருந்திருக்கலாம்


J.Isaac
ஆக 15, 2024 22:24

சனாதனம் என்றால் என்ன?


nisar ahmad
ஆக 15, 2024 13:38

வந்தே மாதரம் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது ஜெய்ஹிந்த் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது ஜாரே ஜஹான்சே அச்சா முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது தேசியக்கொடி முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது ஜெய்ஹோ முஸ்லிமால் உருவாக்கப்பட்டது அதை போல இந்த இந்தியா முஸ்லிம்களை அரவனைத்து இனக்கமான ஆட்சியில் மட்டுமே வல்லரசாக மாற்ற முடியும் இளைஞர்களை கைககளில் புத்தகத்திர்க்கு பதிலாக கத்தியையும் தடியையும் தரூம் பஜக வால் இந்தீயாவை வல்லரசாக்க முடியாது


ஆரூர் ரங்
ஆக 15, 2024 14:27

கத்தியைக் காட்டி குல்லா போட வைத்தது யார்? பிரிவினை கேட்டு நாசமாகியது,சிலிண்டர் வைப்பது எல்லாம் ஒரே கூட்டம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 15, 2024 15:44

முஸ்லிம்களை அரவனைத்து இனக்கமான ஆட்சியில் மட்டுமே ........ பாசு ...... நாங்க அரவணைக்க ரெடி ..... ஆனா பாருங்க ....... சிலிண்டர் அங்கங்கே அப்பப்ப வெடிச்சிருது .... கோவையில் உங்க ஆளுங்களை மட்டும் உசார் பண்ணிட்டு விக்கிரக வழிபாட்டாளர்களை உசார் பண்ணாம பலிகொடுத்ததை மறக்க முடியுங்களா ???? மதமெனப்பிரிந்தது போதும் ன்னு நீங்கள்லாம் கட்டி புடிக்கிறதை இன்னமும் சில பெரு நம்புறாங்க ...


RAMAKRISHNAN NATESAN
ஆக 15, 2024 15:45

இளைஞர்கள் கையில என்ன கொடுக்குறீங்க மதசராவில் ? பூங்கொத்தும், சமாதானப் புறாவையுமா ?


என்றும் இந்தியன்
ஆக 15, 2024 17:19

முஸ்லிமே நீ முஸ்லிமாக இருக்காதே மனிதனாக மாறு முதலில், பிறகு இந்தியனாக மாறு, பிறகு முஸ்லிமாக மாறு, நிச்சயம் இந்தியா மிக மிக உன்னத நிலையை அடையும். இப்போது இருக்கும் 22 கோடி முஸ்லிம்கள் இந்தியாவை நாசம் செய்ய மட்டுமே முயல்கின்றார்கள்


என்றும் இந்தியன்
ஆக 15, 2024 17:23

வந்தே மாதரம் ஒருக்காலும் முஸ்லிம்களால் உருவாக்கப்படவில்லை பாரத் மாதா கி ஜே என்று ஒருக்காலும் ஒரு முஸ்லீம் சொல்லமாட்டான் ஏனென்றால் பெண் என்றால் முஸ்லிமுக்கு தெரிந்தது பிள்ளை பெறும் ஆணின் காம இச்சைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரம் என்று மட்டுமே


சந்திரன்
ஆக 16, 2024 08:41

கத்தியும் வெடிகுண்டும் தூக்கறதே நீங்கதாண்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 15, 2024 13:36

மாதிரி திமுக அடிமைகளுக்கு கடுப்போ கடுப்பு ....


ஆரூர் ரங்
ஆக 15, 2024 11:39

பத்தாண்டுகளுக்கு முன்னர் யாராவது பாரதம் விரைவில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளரும் எனக் கூறியிருந்தால் நகைத்திருப்போம்.இப்போது அது உண்மையாகிவிட்டது. ஜப்பான், ஐரோப்பாவின் வீழ்ச்சியைக் கண்டால் முதலிரண்டு இடங்களுக்குள் முன்னேறப் போவது நிதர்சனம் .


RAMAKRISHNAN NATESAN
ஆக 15, 2024 15:52

\\ முதலிரண்டு இடங்களுக்குள் //// சாரி .... ஊழல் மலிந்திருக்கும் நாட்டில், நவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்த மக்கள்தொகை குறுக்கே வரும் நாட்டில், மத்திய அமைச்சரவை வரை கட்டிங் கலாச்சாரம் பரவி விரவியிருக்கும் நாட்டில் வாய்ப்பில்லை ..... மோடி கடந்த பத்தாண்டுகளில் காங்கிரசால் செய்ய முடியாத பல சாதனைகளை செய்ததென்னவோ உண்மை .....


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி