திசை திருப்புவதா!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. நம் வீரர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த பிரச்னையை திசைதிருப்ப பிரதமர் மோடி, குடும்ப அரசியல் விவகாரத்தை பற்றி பேசுகிறார். மெஹபூபா முப்தி உடன் கூட்டணி வைத்த போது, அவர் வாரிசு அரசியல்வாதி என்பது பா.ஜ.,வுக்கு தெரியாதா?ஒமர் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சிமணிப்பூரை தவிர்ப்பது ஏன்?
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண திட்டங்கள் தொடர்கின்றன. ஆனால் பிரச்னைக்குரிய மாநிலமான மணிப்பூருக்கு செல்வதை அவர் தவிர்த்து வருகிறார். 2023 மே 3ல் அங்கு கலவரம் வெடித்தது. ஜூன் 4ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்ரத்தான வழக்குகள்!
காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா இருந்தபோது, இளைஞர்கள் மீது ஏராளமான வழக்குகளை பதிவு செய்தார். இதற்கு பின், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து, நான் முதல்வரானதும், இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 25,000 வழக்குகளை ரத்து செய்தேன். மெஹபூபா முப்தி, தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி