உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தி.மு.க.,வில் இருப்பது ஊதியமற்ற பணி: மாநில அமைப்பாளர் ராமசாமி பேச்சு

தி.மு.க.,வில் இருப்பது ஊதியமற்ற பணி: மாநில அமைப்பாளர் ராமசாமி பேச்சு

தங்கவயல்: ''தி.மு.க.,வில் இருப்பது, கேஷ் லெஸ் ஜாப்,'' என்று மாநில அமைப்பாளர் ராமசாமி பேசினார்.தி.மு.க.,வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் என்ற தொ.மு.ச., அமைப்பை தங்கவயலில் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று ராபர்ட்சன் பேட்டை நான்காவது பிளாக்கில் நடந்தது. பெமல் தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி அருணாசலம் தலைமை வகித்தார். கர்நாடக மாநில தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி தலைமை வகித்து பேசியதாவது:கர்நாடக மாநிலத்தில் முதல் தொழில் நகராக உருவானது தங்கவயல். கர்நாடக மாநிலத்திற்கு முதல் முதல்வர் கே.சி.ரெட்டியை கொடுத்ததும், தங்கவயல் தான். தங்கச்சுரங்க தொழில் நடந்த போது, முதல் தொழிற்சங்கமும் இங்கு தான் துவங்கியது. தொழிற்சங்கத் தலைவர்களை எம்.எல்.ஏ., ஆக்கியதும் தங்கவயல் தான்.தங்கச் சுரங்கம் தற்போது மூடப்பட்டுள்ளது. மீண்டும் புனரமைப்புக்கு மத்திய அரசு முன் வந்துள்ளது. எனவே தொழிலாளர் நலனுக்காக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தேவை. இங்குள்ள பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும்.தமிழகத்தில் தி.மு.க.,வுடன் இண்டியா கூட்டணியை சேர்ந்த 40 எம்.பி.,க்கள் உள்ளனர். தங்கவயலில் தொ.மு.ச.,வை துவக்க எம்.பி., மற்றும் அமைச்சர்கள் வர உள்ளனர்.தங்கவயல் அ.தி.மு.க., பொருளாளர் ரஞ்சித் குமார், தி.மு.க.,வில் சேர கடிதம் கொடுத்துள்ளார். முறையாக உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் கையெழுத்திடுவார். தி.மு.க.,வில் இடம் பெறுவது, 'கேஷ் லெஸ் ஜாப்' என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கத்தில் இருந்து வருகிறேன். தங்கச் சுரங்கத்தின் கடன் 160 கோடி ரூபாய். அதை மத்திய அரசு வழங்கி புனரமைத்து இருந்தால், இன்னும் பல ஆண்டுகள் தங்கச் சுரங்கம் இயங்கி இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.வக்கீல் மணிவண்ணன் பேசுகையில், ''தங்கச் சுரங்க தொழிலாளர் வீடுகளை சொந்தம் ஆக்க வேண்டும். நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இதற்காக தொ.மு.ச., செயல்பட வேண்டும்,'' என்றார்.சாரங்கபாணி, சேகர், ஆல்பர்ட் குமார் ரஞ்சித் ஆகியோரும் பேசினர். பெருமாள், கண்ணையன் உட்பட பலர் பங்கேற்றனர்.புகார் பட்டியல்'தி.மு.க.,வில் கோஷ்டி அரசியலை நடத்தி வரும் முன்னாள் அமைப்பாளர் கிள்ளிவளவன் கோஷ்டியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். தங்கவயல் தி.மு.க.,வில் யாருக்கு செல்வாக்கு உள்ளதோ அவரை நகர செயலராக நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை பலரும் வலியுறுத்தினர்.அதற்கு ராமசாமி பதில் எதுவும் கூறாமல், ''தங்கவயலில் நடக்கும் தொ.மு.ச., துவக்க விழாவுக்கு அமைச்சர், எம்.பி., வர உள்ளனர். விழா சிறப்பாக நடக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை,'' என்றார்.தி.மு.க.,வின் தொ.மு.ச., கிளையை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள். இடம்: தங்கவயல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை