ரோந்து பணியில் நாய்கள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நாக்பூர்: வனப்பகுதிகளில், குறிப்பாக எல்லை பகுதிகளில், விலங்குகளை வேட்டையாடுவது, மின்வேலி அமைத்து அவற்றை சிக்கவைப்பது போன்றவற்றை தடுக்க, வனத்துறை சார்பில் ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த ரோந்து குழுக்களுக்கு உதவுவதற்காக, மோப்ப நாய் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 12 நாய்கள் இந்தப் படையில் இடம்பெற்றுஉள்ளன.இந்நிலையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தைச் சேர்ந்த மாலிநோயிஸ் வகையைச் சேர்ந்த, ஒன்பது மாத பெலா, இந்தப் படையில் இணைந்துள்ளது. இதற்கு, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது, மஹாராஷ்டிர மாநிலம் பென்ச் புலிகள் காப்பகத்தில் பணியில் சேர்ந்துள்ளது. அங்கு ஏற்கனவே ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த நாய் பணியில் உள்ளது.