உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சின்னம் குறித்த பிரச்னைகளுக்கு இப்போது மனு செய்யாதீர்கள்!

சின்னம் குறித்த பிரச்னைகளுக்கு இப்போது மனு செய்யாதீர்கள்!

புதுடில்லி: வேறு கட்சி சின்னத்தில் போட்டியிடு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ரவி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில் சில தொகுதிகளில் குறிப்பிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், வேறு கட்சியின் சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.'இது வாக்காளர்களை குழப்பக் கூடிய விஷயம். எனவே, இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்' என, கோரியிருந்தார். இந்த மனு, நேற்று நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இது போன்ற மனுக்களை தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யுங்கள். இப்போது இவற்றை விசாரிக்க முடியாது' என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ