உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெமல் நிறுவனத்தில் தயாராகும் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள்

பெமல் நிறுவனத்தில் தயாராகும் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள்

பெங்களூரு: பயணியர் மிகவும் எதிர்பார்க்கும், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள், பெமல் நிறுவனத்தில் தயாராகின்றன. புளூ மற்றும் பிங்க் நிற பாதைகளில் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ நிறுவன நிர்வாக இயக்குனர் மஹேஸ்வர ராவ் அளித்த பேட்டி:பெங்களூரு மக்கள், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். பிங்க் மற்றும் புளூ நிற மெட்ரோ பாதைகளில், இத்தகைய ரயில்களை இயக்க, மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்த இரண்டு பாதைகளிலும் இயக்கத் தேவையான ரயில்களை, பெங்களூரில் உள்ள மத்திய அரசின் பெமல் நிறுவனம் தயாரிக்கிறது.இது தொடர்பான ஒப்பந்தத்தில், இரு தரப்பினரும் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளனர்.'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், டிரைவர் இல்லாத ரயில்கள் தயாராகின்றன. 3,177 கோடி ரூபாய் செலவில், 318 பெட்டிகளை பெமல் நிறுவனம் தயாரிக்கிறது.காளேன அக்ரஹரா - நாகவாரா இடையில், 21 கி.மீ., துார பிங்க் பாதை; சில்க் போர்டு - விமான நிலையம் இடையே 55 கி.மீ., துாரம் வரையிலான புளூ பாதையில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.ஆர்.வி., ரோடு - பொம்மசந்திரா இடையிலான மஞ்சள் பாதைக்கு, சீனாவில் இருந்து ஏற்கனவே டிரைவர் இல்லாத ரயில்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.சீனாவில் இருந்து சரியான நேரத்தில், அந்த ரயில்கள் வரவில்லை. இதனால் ரயில் போக்குவரத்து தாமதமானது. தற்போது ரயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.நடப்பாண்டோ அல்லது அடுத்த ஆண்டோ இப்பாதையில் வர்த்தக போக்குவரத்து துவங்கும்.பிங்க் மற்றும் புளூ பாதைகளில், மெட்ரோ ரயில் போக்குவரத்து தாமதம் ஆகக்கூடாது என்பதால், சீனா நிறுவனத்துக்கு பதிலாக, நமது நாட்டின் பெமல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து, பயணியரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை