உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதையில் வாகனம் இயக்கம்: ரூ.8 லட்சம் அபராதம் வசூல்

போதையில் வாகனம் இயக்கம்: ரூ.8 லட்சம் அபராதம் வசூல்

பெங்களூரு:குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக, ஒரே நாளில், 799 வழக்குகள் பதிவு செய்த போக்குவரத்து போலீசார், 7.79 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.பெங்களூரு நகரில் விபத்துகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதை தடுக்க, நகர போக்குவரத்த போலீசார், இம்மாதம் 22ம் தேதி முதல் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியில், நேற்று முன்தினம் இரவு எம்.ஜி., சாலை, ஹெப்பால், இந்திரா நகர், கோரமங்களா, மல்லேஸ்வரம், உப்பார்பேட் உட்பட பல பகுதிகளில் 1,200 போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தினர்.இதில், 34,676 இருசக்கர வாகன ஓட்டிகளை பரிசோதித்தனர். இதில், 779 பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 7.79 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இரு சக்கர வாகன ஓட்டியிடம், மது அருந்தி உள்ளாரா என சோதனை நடத்திய போலீசார். இடம்: பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை