உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "மரண வாக்குமூலத்தை சந்தேகிக்க கூடாது": உச்சநீதிமன்றம்

"மரண வாக்குமூலத்தை சந்தேகிக்க கூடாது": உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'மரண வாக்கு மூலங்களை பதிவு செய்யும்போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது' என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.திருவண்ணாமலையை சேர்ந்த ஜோதி என்ற பெண், கணவர் தன்னை தீ வைத்து எரித்ததாக மரண வாக்கு மூலம் அளித்து இருந்தார். மரண வாக்குமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(செப்.,03) விசாரணைக்கு வந்தது.அப்போது, ' 95% காயம் அடைந்திருந்த நிலையில், எப்படி ஜோதியால் சரியாக வாக்குமூலம் கொடுத்திருக்க முடியும்? ' மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'மரண வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது' என திட்டவட்டமாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GMM
செப் 03, 2024 14:10

சந்தேகம் எழவில்லை. 95 சதவீத காயமுடைய பெண் வாக்குமூலம் கொடுக்க முடியும் என்பதை டாக்டர் உறுதி செய்ய வேண்டும். கேள்வி சரிதான். கணவரின் கொடிய கோபத்திற்கு காரணம் என்ன? டாக்டர் ஏன் மரண வாக்குமூலம் பெறவில்லை. ? நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றால், கலெக்டர் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டும். அனுமதிக்குமா நீதிமன்றம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை