மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
பெங்களூரு, : பெங்களூரு, மைசூரில் கட்டட கட்டுமான நிறுவன உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் ஈ.டி., எனும் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.பெங்களூரின் யு.பி., சிட்டியின் கிங் பிஷர், மல்லேஸ்வரம், பசவேஸ்வர நகர், பன்னரகட்டா சாலை, ஹனுமந்தநகர், மைசூரின் இரண்டு இடங்களில் பிரபலமான பில்டர்களின் அலுவலகங்கள், வீடுகளில் நேற்று அதிகாலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.வீட்டுமனை கொடுப்பதாக பொதுமக்களிடம் மோசடி செய்தது, சொத்து பத்திரத்தில் முறைகேடு, சொத்துகளை மதிப்பிடுவதில் மோசடி, வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். எனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்தன. இவற்றை அதிகாரிகள் கைப்பற்றி, ஆய்வு செய்கின்றனர்.கடந்த மாதம் பெங்களூரின் எட்டு இடங்களில், நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 11.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1 hour(s) ago