உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பணி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்

தேர்தல் பணி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்

பாகல்கோட்: தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.பாகல்கோட் முதோலை சேர்ந்தவர் கோவிந்தப்பா, 38. அரசு பள்ளி ஆசிரியர். பாகல்கோட் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஜமகண்டி மைசூரு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் ஓட்டுச்சாவடிக்கு, தேர்தல் பணிக்காக கோவிந்தப்பா நியமிக்கப்பட்டு இருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டார்.முதோல் பஸ் நிலையத்திற்கு சென்ற அவர், ஜமகண்டி செல்லும் பஸ்சுக்காக காத்து இருந்தார். திடீரென சுருண்டு விழுந்தார். அதிர்ச்சி அடைந்த சக பயணியர், கோவிந்தப்பாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறினார்.கோவிந்தப்பா மறைவுக்கு பாகல்கோட் மாவட்ட கல்வி அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி