உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீவிர வறுமை கிட்டத்தட்ட ஒழிப்பு நிடி ஆயோக் உறுப்பினர் பேச்சு

தீவிர வறுமை கிட்டத்தட்ட ஒழிப்பு நிடி ஆயோக் உறுப்பினர் பேச்சு

புதுடில்லி :“நாட்டில் தீவிர வறுமையில் உள்ளோர் எண்ணிக்கை 1 சதவீதமாகவே உள்ளது. இது விரைவில் ஒழிக்கப்படும்,” என நிடி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் வீர்மானி கூறியுள்ளார்.தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றி, தற்போது நிடி ஆயோக் உறுப்பினராக உள்ள அரவிந்த் வீர்மானி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:உலக வங்கி, 1960களில் ஒரு விளக்கத்தை உருவாக்கியது. அதன்படி, நாளொன்றுக்கு, 1 டாலர், அதாவது, 87 ரூபாய் வருவாய் இல்லாதோர், தீவிர வறுமையில் உள்ளோராக குறிப்பிடப்படுவர். தற்போதைய நிலையில் அது 1.9 டாலர், அதாவது 165 ரூபாயாகும். அதன்படி பார்த்தால், நம் நாட்டில், கடந்த 11 ஆண்டுகளில் 12.2 சதவீதமாக இருந்த தீவிர வறுமை பிரிவினர் எண்ணிக்கை, 2.3 சதவீதமாக குறைந்தது. தற்போது, 1 சதவீதம் பேரே இந்த பிரிவில் உள்ளனர்.விரைவில், இந்தியாவில் தீவிர வறுமையில் உள்ளோரே இல்லை என்ற நிலை ஏற்படும்.அதுபோல, நாளொன்றுக்கு 2 டாலர், அதாவது 174 ரூபாய் வருவாய் இல்லாதோர், தீவிர வறுமை பிரிவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய பணவீக்கத்தின்படி நாளொன்றுக்கு 3.2 டாலர், அதாவது 279 ரூபாய் வருவாய் இல்லாதோர், தீவிர வறுமை பிரிவுக்கு செல்லும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.நம் நாட்டில் இந்த பிரிவில், 12 ஆண்டுகளுக்கு முன், 50 சதவீதம் பேர் இருந்தனர். தற்போது, அது 15 சதவீதமாக குறைந்துஉள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள், இந்த பிரிவும் ஒழிக்கப்பட்டு விடும்.இவ்வாறு வறுமையில் இருந்து மக்களை மீட்டெடுத்தாலும், வருவாய் ஏற்றத்தாழ்வு பாகுபாடு என்பது நிச்சயம் மிகப்பெரிய பிரச்னையாகவே இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

अप्पावी
மார் 13, 2025 11:19

80 கோடி பேருக்கு மேலே ரேஷன் கார்டுதாரர்கள் இருக்காங்க. நிட்டி உறுப்பினருக்கு தெரியுமோ? எல்லோரும் ஓசி சோறு, சப்பாத்தி.


Rajarajan
மார் 13, 2025 09:45

அப்போ எதுக்கு அரசு ஊழியருக்கு இன்னும் பஞ்சபடி ?? வோட்டு வாங்க தானே ? பொதுநல வழக்கு வேணுமோ ?


sundarsvpr
மார் 13, 2025 05:39

வறுமையை ஒழிக்க மன வலிமையை அதிகரிக்கவேண்டும். ஏழைகளுக்கு இலவசம் வழங்குவதால் ஏழை பணக்காரன் வேறுபாடு குறையாது. தானம் வழங்குவதால் தர்மம் அதிகரிக்கும் என்பது உண்மையென்றாலும் தரம் அறிந்து வழங்குவதுதான் உண்மையான பலன்.


Kasimani Baskaran
மார் 13, 2025 03:44

திராவிட ஒழிப்பு சிறப்பாக நடத்தினாலேயே ஏராளமான பணம் கிடைக்கும். அதை வைத்து எளிதில் வறுமையை ஒழித்து விட முடியும்.


புதிய வீடியோ