மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago
பையப்பன ஹள்ளி : மருமகள் வீட்டை விட்டுச் சென்றதால், மாமனார், மாமியார் தற்கொலை செய்து கொண்டனர்.பெங்களூரின், ஹளே பையப்பனஹள்ளியில் வசித்தவர் சந்திரசேகர், 56. இவரது மனைவி சாரதா, 46. தம்பதியின் மூத்த மகன் சூர்ய பிரசாந்துக்கு, சமீபத்தில் திருமணம் செய்து வைத்தனர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்தனர்.ஆனால், தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென, கணவர் சூரிய பிரசாந்த்தை அவரது மனைவி நச்சரித்தார். இதற்கு அவர் சம்மதிக்காததால், கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மாமியார், மாமனார், கணவர் சமாதானம் செய்தும் பலனில்லை.மருமகள் வீட்டை விட்டுச் சென்றதால், சந்திரசேகரும், சாரதாவும் மனம் வருந்தினர். நேற்று முன் தினம் இரவு, வீட்டில் இருந்த இளைய மகன் ஸ்ரேயஷை, முட்டை வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பினர். அதன்பின் தம்பதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.முட்டை வாங்கிக் கொண்டு, சிறிது நேரத்துக்கு பின் வீட்டுக்கு வந்த ஸ்ரேயஷ், தாயை அழைத்தார். கதவு உட்புறமாக பூட்டியதை கண்டு, கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை.பீதியடைந்த அவர், அதே பகுதியில் வசிக்கும் தன் தாய்மாமாவின் வீட்டுக்குச் சென்று, அவரை அழைத்து வந்தார். அவர் கதவை தட்டியும் திறக்கவில்லை. அதன்பின் கதவை உடைத்து பார்த்தபோது, சந்திரதேகரும், சாரதாவும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.தகவலறிந்து அங்கு வந்த பையப்பனஹள்ளி போலீசார், விசாரணையை துவக்கினர்.
2 hour(s) ago | 9
7 hour(s) ago
7 hour(s) ago