உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானப்படை விங்க் கமாண்டர் மீது பெண் அதிகாரி பாலியல் புகார்

விமானப்படை விங்க் கமாண்டர் மீது பெண் அதிகாரி பாலியல் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பெண் விமானப்படை அதிகாரி ஒருவர் விங்க் கமாண்டர் மீது பாலியல் புகார் கூறியுள்ளது காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.காஷ்மீரின் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் விமானப்படை முகாமில் பணியாற்றி வரும் பெண் விமானப்படை அதிகாரி ஒருவர் பட்ஹாம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தனது உயர் அதிகாரியான விங்க் கமாண்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.கடந்த 2023-ம் ஆண்டு டிச. 31-ம் தேதி புத்தாண்டு பரிசுடன் வந்து புத்தாண்டு விருந்தில் பங்கேற்க வருமாறு கட்டாயப்படுத்தினார். மறுத்தேன் உடன் அன்று இரவே எனது அறைக்கு வந்து என்னிடம் அத்துமீறி இயற்கை மாறாக உறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். அவரிடமிருந்து தப்பித்து வெளியேறினேன். விங்க் கமாண்டரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.இவரது புகார் தொடர்பான தகவல் கர்னல் ரேஞ்ச் அதிகாரியின் கவனத்திற்கு சென்றது. அவரது உத்தரவின் பேரில் பட்ஹாம் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
செப் 11, 2024 06:00

இராணுவம்தான் விசாரிக்கும் - வெளியே புகார் கொடுத்து அதை விசாரிக்க சிவில் காவல்துறைக்கு அதிகாரம் கிடையாது. அப்படி சொன்னால் அது ஒரு கட்டமைக்கப்பட்ட பொய் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.


subramanian
செப் 10, 2024 21:50

ஆண் பெண் யாராக இருந்தாலும் சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம்.


தாமரை மலர்கிறது
செப் 10, 2024 21:15

பொதுவாக பெண்கள் பதவி உயர்வுக்காக உயர் அதிகாரியை காமத்தை காட்டி மயக்குவது, பின்னர் கொடுத்த சுகத்திற்கு ஏற்றவாறு வாழ்வாதாரம் மேலே எழும்பவில்லையே என்ற துயரத்தில் கொக்கி போட்டு மிரட்டி பார்ப்பது, பின்னர் பொதுவெளியில் வந்து குறை சொல்வது என்பது தொடர்ந்து எல்லா துறைகளிலும் நடந்துவருகிறது. இது பில் கிளிண்டன் காலத்திற்கு முன்பே இருந்து இப்படித்தான் காலம் காலமாக நடந்து வருகிறது. பாலியல் வன்முறை செய்யப்பட்டால், உடனே ஏன் சொல்லவில்லை? ஏன் ஒரு வருடம் காத்திருந்தாய்? எவ்வளவு கிட்டுகிறது என்று எண்ணி பார்த்து பாலியல் குற்றம் சொல்ல கூடாது. பாலியல் குற்றம் நடந்தால், உடனடியாக சொல். இல்லையென்றால், குற்றம் சொல்லும் பெண்கள் தான் பிளாக்மெயில் குற்றவாளிகள்.


Sivak
செப் 10, 2024 23:14

கரெக்டா சொன்னீங்க ... பல பெண்கள் நரித்தனம் ... காசு கிடைத்தால் எல்லாம் பரவாயில்லை ... இல்லையேல் பாலியல் புகார் ... சில ஆண்கள் இந்த பெண்களின் நரித்தனம் புரியாமல் அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் பொது எரிச்சலாக இருக்கும் ....


Barakat Ali
செப் 10, 2024 20:48

சம்பவம் நடந்து ரொம்ப ரொம்ப நாளாச்சு .... ஆனா அந்தம்மா இப்பதான் மேட்டரை வெளியே உடுது .... ஆக்சுவலா என்னன்னா அண்ணன் பப்புவுக்கு அமெரிக்காவில் பேசுவதற்காக அவருடைய சகோதரி பெண் அதிகாரி கொடுத்த அடுத்த டாப்பிக் ....


GMM
செப் 10, 2024 20:28

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் புகார் மாநில போலீஸிடம் கூறியது குற்றம். இது போன்ற நடைமுறை முன்பு கேட்டதில்லை. மாநில போலீசாருக்கு உள்ளூர் அரசியல், கிரிமினல் தொடர்பு இருக்கும் . விசாரணையில் விமானப்படை ரகசியம் வெளியேறலாம் . மக்களை விசாரிக்க , பாதுகாக்க தான் போலீசார் , வழக்கறிஞர் ஆனால் , முழுநேரமும் அரசு ஊழியர்களை விசாரித்து வருகின்றனர். பணியில் உள்ள அரசு ஊழியரை போலீசார் , நீதிமன்றம் விசாரிக்க உரிய அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். ராணுவம் குற்ற பத்திரிகை தயார் செய்த போலீசை கைது செய்ய முடியம்.


புதிய வீடியோ