மேலும் செய்திகள்
பெரும் தவறு!
5 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
5 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
5 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
8 hour(s) ago
பெங்களூரு, : கர்நாடகாவில், முதல் கட்டமாக நடக்கின்ற 14 தொகுதிகளில், நேற்று 26 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதன் மூலம் நேற்று வரை மொத்தம் 50 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.கர்நாடகாவில் முதல் கட்டமாக, உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்திய, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.இதற்கான வேட்புமனுத் தாக்கல், இம்மாதம் 28ம் தேதி துவங்கியது. முதல் நாளில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல், துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ், தட்சிண கன்னடா பா.ஜ., வேட்பாளர் பிரிஜேஸ் சவுடா உட்பட 23 ஆண்கள், 2 பெண்கள் என 25 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.புனித வெள்ளி என்பதால், நேற்று முன்தினம் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. எனவே இரண்டாவது நாளான நேற்று, அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில், பெங்களூரு ரூரல் தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சின்னப்பா சிக்கஹகடே நேற்று மனு தாக்கல் செய்தார்.அவரை தவிர சுயேச்சைகள் தான் 24 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர். மற்றபடி பிரதான அரசியல் கட்சி சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., கட்சி வேட்பாளர்கள் நாளை முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 hour(s) ago
5 hour(s) ago | 1
5 hour(s) ago
8 hour(s) ago