உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியின் புதிய காருக்கு தீ தலைமை காவலர் கைது

மனைவியின் புதிய காருக்கு தீ தலைமை காவலர் கைது

நஜாப்கர்: மனைவியின் புதிய காரை எரித்ததற்காக டில்லி காவல்துறையின் தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.நஜாப்கர் பகுதியில் வசிப்பவர் சுதீர். டில்லி காவல் துறையில் தலைமைக்காவலராக பணியாற்றுகிறார். இவரது மனைவி நிஷா ஷோகீன். அரசு பள்ளி ஆசிரியை.இருவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். எனினும் ஒரே கட்டடத்திலேயே வசித்து வருகின்றனர். தரைத்தளத்தில் சுதீரும் முதல் தளத்தில் குழந்தைகளுடன் நிஷாவும் வாழ்கின்றார்.மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, கடந்த மாதம் 26ம் தேதி வீட்டின் முன் நிறுத்தியிருந்த அவரது புதிய காருக்கு சுதீர் தீ வைத்தார். இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுதீரை கைது செய்தனர். அவரது சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இதையடுத்து தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசில் நிஷா புகார் அளித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி