மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago
ஸ்ரீநகர், 'கிரிப்டோகரன்சி' மோசடியில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் அமலாக்கத் துறையினர் முதன்முறையாக சோதனை நடத்தினர்.லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதியில், ஏ.ஆர்.மிர், அஜய் குமார் சவுத்ரி ஆகியோர், 'எமோலியண்ட் காயின் லிமிடெட்' என்ற பெயரில், போலி கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபட்டனர். இதில் முதலீடு செய்வோருக்கு, 10 மாதங்களில் 40 சதவீத லாபம் தருவதாக அவர்கள் விளம்பரம் செய்தனர். இதை நம்பி, 2,500க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர். 7.34 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை, ஏ.ஆர்.மிர், அஜய் குமார் சவுத்ரி ஆகியோர் திருப்பித் தரவில்லை. மேலும், அந்த பணத்தில் ஜம்மு - காஷ்மீரின் ஜம்முவில், அவர்கள் நிலங்களை வாங்கி குவித்தனர். இது குறித்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 2020ல் லே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த மோசடியில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறையினரும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, லடாக்கில் உள்ள லே பகுதியில், அமலாக்கத் துறையினர் நேற்று முதன்முறையாக அதிரடி சோதனை நடத்தினர். இதே போல், ஜம்மு - காஷ்மீரின் ஜம்மு, ஹரியானாவின் சோனிபட் என, மொத்தம் ஆறு இடங்களில் சோதனை நடந்தது.
7 hour(s) ago | 2
13 hour(s) ago