உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மராத்தா கோட்டாவுக்காக: மனோஜ் ஜாரங்கே 16-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

மராத்தா கோட்டாவுக்காக: மனோஜ் ஜாரங்கே 16-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

சத்ரபதி சாம்பாஜிநகர்: மராட்டிய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடத்த உள்ளதாக மனோஜ் ஜாரங்கே அறிவித்து உள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டிய சமூகத்தினரான இதர பிற்பட்ட வகுப்பினர் வகையிலான குன்பி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனோஜ் ஜாரங்கே போராட்டம் நடத்தி வருகிறார். இதுபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னதாக மாநிலத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து மாநில அரசு மராட்டிய இன மக்களுக்கு அரசின் அனைத்து துறைகளிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில் மராத்தா இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வரும் மனோஜ் ஜாரங்கே அந்தர்வாலி சாரதி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மராத்வாடா விடுதலை நாள் கொண்டாடப்பட உள்ளது. அதே நாளில் மாராத்தா மக்களுக்கு இட ஒதுக்கீடை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முடி வு செய்யப்பட்டுள்ளது. மராத்தா வாடா பகுதி இந்தியாவின் சுதந்திரத்தின் போது ஹை தராபாத் நிஜாம் பகுதியின் கீழ் இயங்கி வந்தது.1948 ம் ஆண்டு செப்.,17 ம் தேதி விவசாயிகள் மற்றும் பலர் நடத்திய போராட்டம் காரணமாக மராத்வாடா பகுதி இந்தி்யாவுடன் இணைந்தது. கடந்த திங்கட்கிழமை மாநில சிறுபான்மை மேம்பாட்டுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் போனில் பேசுகையில் மராத்தா கோரிக்கை நிறைவேற்றுவதாகவும், அனைத்து மராட்டிய இன மக்களுக்கும் குன்பி சான்றிதழ் வழங்குவதாகவும் கூறினார். மேலும் இது குறித்து மாநில முதல்வர் ஏக்நாத்ஷிண்டே விடம் பேசுவதாகவும் கூறினர் என மனோஜ்ஜாரங்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
செப் 11, 2024 00:25

முதலில் சாதி கோட்டாவை ஒழித்தால், மற்ற கோட்டா தானாகவே ஒழிந்துவிடும்.


ஆரூர் ரங்
செப் 10, 2024 21:59

மிகவும் முன்னேறிய தமிழகத்தில் 95 சதவீத சாதிகள் மிகவும் பின்னேறிய BC MBC SC. பட்டியலில்( போலியாக) சேர்க்கப்பட்டுவிட்டன. அங்கும் அதிகார பலம் மிக்க சாதிகளை இடஒதுக்கீடு சாதிகளாக அறிவிக்க முயற்சி. பாவம் நிஜமாகவே வறுமையிலுள்ள சமுதாயங்கள்.


புதிய வீடியோ