மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
39 minutes ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
2 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
2 hour(s) ago
பெங்களூரு : முன்னாள் முதல்வர் குமாரசாமி, மாண்டியா எம்.பி., சுமலதாவை நேற்று சந்தித்து பேசினார். மாண்டியாவில் போட்டியிடும் தன்னை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டு உள்ளார்.மாண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரிஷ். கடந்த 2019 தேர்தலில் மாண்டியாவில் போட்டியிட்ட, முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் நிகிலை தோற்கடித்தார். தேர்தலுக்கு முன்பு இருந்தே, சுமலதா, குமாரசாமி இடையில், வார்த்தை மோதல் இருந்தது. தேர்தல் முடிந்த பின்னரும், இருவருக்கும் இடையிலான மோதல் நீடித்தது.இந்நிலையில் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட, சுமலதா விரும்பினார். ஆனால் கூட்டணியில் உள்ள, ம.ஜ.த., மாண்டியாவை கேட்டது. ஆனால் தொகுதியை எக்காரணம் கொண்டும் விட்டு தர மாட்டேன் என்று, சுமலதா பிடிவாதமாக கூறினார். பா.ஜ., சீட் கிடைக்கும் என்றும், நம்பிக்கையில் இருந்தார். ஆலோசனை
ஆனாலும் மாண்டியாவை, ம.ஜ.த.,வுக்கு, பா.ஜ., கொடுத்து விட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சுமலதா, நாளை மறுநாள், மாண்டியாவில் ஆதரவாளர் கூட்டத்திற்கு, அழைப்பு விடுத்து இருந்தனர்.இதற்கிடையில் பகைமையை மறந்து, சுமலதாவை சந்தித்து பேச தயார் என்று, குமாரசாமி அறிவித்து இருந்தார். இதற்காக பெங்களூரு ஜெ.பி.நகரில் உள்ள, சுமலதா வீட்டிற்கு நேற்று மாலை 5:00 மணிக்கு, குமாரசாமி சென்றார்.அவரை சிரித்த முகத்துடன், சுமலதா வரவேற்றார். பின்னர் இருவரும் அரை மணி நேரம், ஆலோசனை நடத்தினர். சுமலதாவின் மகன் அபிஷேக், திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உடன் இருந்தனர். மாண்டியாவில் போட்டியிடும் தன்னை ஆதரிக்கும்படி, சுமலதாவிடம், குமாரசாமி கேட்டுக்கொண்டார். அக்கா ஆதரவு
ஆலோசனை முடிந்ததும் குமாரசாமி அளித்த பேட்டி:அம்பரிஷ் வீடு ஒன்றும், எனக்கு புதிது இல்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள். வரும் 4 ம் தேதி மாண்டியாவில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். இதனால் சுமலதா அக்காவின் ஆதரவு கேட்க வந்தேன். எங்களது உரையாடல் சுமூகமாக இருந்தது. அவருடன் நிறைய பேசி உள்ளேன்.கடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ., ஆதரவு இருந்தது. இப்போதும் பா.ஜ., மேலிட ஆதரவு, சுமலதாவுக்கு உள்ளது. மாண்டியாவில் 3 ம் தேதி ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்த இருப்பதாக, சுமலதா என்னிடம் கூறினார். அதில் எந்த தவறும் இல்லை. அவரது ஆதரவாளர்களின் கருத்துகளை கேட்பதும் முக்கியம்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, நான் முதல்வரான போது, ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்த ஒத்துழைப்பதாக கூறினர். ஆனால் எனக்கு தொல்லை கொடுத்தனர். என்னை வேலை பார்க்க விடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.சுமலதா அளித்த பேட்டி:மாண்டியாவில் போட்டியிடுகிறேன். உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் குமாரசாமி என்னிடம் கேட்டார். நாம் அனைவரும் ஒருங்கிணைத்து, பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம் என்றும் கூறினார். கடந்த தேர்தலின் போது, நமக்குள் ஏற்பட்ட, கசப்பான அனுபவங்களை மறந்து விடும்படியும் என்னிடம் கேட்டு கொண்டார்.தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று, அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. முடிவை நான் தான் எடுக்க வேண்டும். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். பா.ஜ., சார்பில் போட்டியிட்டு தோற்று இருந்தாலும், கவலைப்பட்டு இருக்க மாட்டேன். ஆனால் எனது தொகுதியை, ம.ஜ.த.,வுக்கு கொடுத்து உள்ளனர். அரசியலில் சில நேரம், இது நடக்க தான் செய்யும். கடந்த தேர்தலில் எனக்கு நிறைய சவால் இருந்தது. அம்பரிஷ் ஆதரவாளர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். ஆதரவாளர்களுடன் 3ம் தேதி கூட்டம் நடத்துகிறேன். நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.
39 minutes ago
2 hour(s) ago
2 hour(s) ago