உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்பத்தகராறில் மருமகனை சுட்டுக்கொன்ற மாஜி போலீஸ் அதிகாரி கைது

குடும்பத்தகராறில் மருமகனை சுட்டுக்கொன்ற மாஜி போலீஸ் அதிகாரி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாப்பில் குடும்ப தகராறில் மருமகனை கோர்ட் வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாஜி போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். பஞ்சாப்பின் சண்டிகரை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மல்வீந்தர்சிங், இவர் தன் மகளை டில்லியைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஹர்ப்ரீத்சிங் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.கடந்த சில ஆண்டுகளாக மகள் - மருமகன் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு விவகாரத்து வழக்கு வரை சென்றது. இன்று சண்டிகார் மாவட்ட கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் சமரசம் ஏற்படாததால், ஆத்திரமடைந்த மல்வீந்தர்சிங், தன் மகளின் கணவர் (மருமகன்) என்றும் பாராமல் ஹர்ப்ரீத்சிங்கை துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே மருமகன் ஹர்ப்ரீத்சிங் உயிரிழந்தார். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மல்வீந்த்சிங்கை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kanns
ஆக 04, 2024 08:46

Nowadays Wife In laws & her side Relatives along with Crl Case Hungry Police & Judges are Dangerous to Our Famous Family System & Society


Ramesh Kumar
ஆக 03, 2024 22:49

Stern action should be given to this retired Police officer


RADHAKRISHNAN
ஆக 03, 2024 21:38

ஏங்க சொந்தமா லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருக்கலாம் இல்லையா? உங்கள் மூலைக்கு எட்டவில்லைதானே? அட கடவுளே? யாரடா அங்கே அடேய் லகுடபாண்டியர்களா?


Ravi Manickam
ஆக 03, 2024 20:57

துப்பாக்கி முனையில் திருமணத்தை நடத்திய சஞ்சய்காந்தியின் மாமனார் கர்னல் ஆனந்த் நினைவிற்க்கு வருகிறார்.


Barakat Ali
ஆக 03, 2024 20:49

என்னது மாப்ளையை யேவா ????இனிமே சப்ப ரீச் கூட எச்சரிக்கையா இருக்கணும் ........


rama adhavan
ஆக 03, 2024 20:31

பெண்ணை பெற்று மணம் செய்து தரும் பல இந்திய தந்தைகள் மருமகன் குடும்பத்தால் சாகும் வரை நிம்மதி குலைந்து நடை பிணமாகத்தான் தான் உள்ளனர். இந்த நிகழ்வு ஒரு சிறு உதாரணம்.


Ramesh Sargam
ஆக 03, 2024 20:06

மாஜி போலீஸ் அதிகாரியிடம் எப்படி துப்பாக்கி வந்தது? பதவி முடிந்தபிறகு துப்பாக்கியை காவல்துறையிடம் handover செய்யவேண்டும் அல்லவா?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை