மேலும் செய்திகள்
'துாய்மை பணியாளர் இறப்பில் தமிழகம் முதலிடம்'
02-Aug-2024
பகர்கஞ்ச்:களப்பணியாளர்களுக்கு இலவச தேநீர், சிற்றுண்டி வழங்க என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் முடிவு செய்துள்ளது.இந்தத் திட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சியைச் சேர்ந்த பல்வேறு பிரிவு களப் பணியாளர்கள், தங்கள் பணியை அதிகாலை 4:00 மணிக்கே துவங்குகின்றனர். தொடர் பணி காரணமாக அவர்களுக்கு காலை நேர உணவு சாப்பிட நேரமிருப்பதில்லை.பெரும்பாலானோர் காலை உணவே சாப்பிடுவதில்லை. இதனால் அவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுகிறது. இதற்காக களப்பணியாற்றும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு இலவச தேநீர், சிற்றுண்டிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.துப்புரவுப் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், மின்சாரப் பிரிவை சேர்ந்த லைன்மேன்கள் உட்பட 5,000க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் பலனடைவர்.இதுபோன்ற நடைமுறை காவல்துறை, துணை ராணுவப் படையில் உள்ளது. அதைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.எப்போது இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும், எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது, எப்போது வினியோகிக்கப்படும் உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை.
02-Aug-2024