உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புலி நடமாட்டத்தால் மைசூரு புறநகரில் கிலி

புலி நடமாட்டத்தால் மைசூரு புறநகரில் கிலி

மைசூரு: மைசூரு புறநகரில் புலி நடமாடுவதால் கிராமத்தினர் 'கிலி' அடைந்துள்ளனர். இதை சிறை பிடிக்க வனத்துறையினர் முயற்சிக்கின்றனர்.மைசூரின் வரகோடு கிராமத்தின் மொரார்ஜி தேசாய் பள்ளி அருகில் கடந்த ஒரு வாரத்துக்கு முன், புலியின் நடமாட்டம் காணப்பட்டது. தகவலறிந்து கிராமத்துக்கு வந்த வனத்துறையினர், புலியை பிடிக்க, கூண்டு வைத்தனர். ஒரு வாரமாகியும் புலி சிக்கவில்லை. வேறு இடத்துக்கு சென்றிருக்கலாம் என, கருதினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, இதே இடத்தில் புலி நடமாடியது. சாலையை கடந்து சென்றதை பார்த்து மக்கள் 'கிலி' அடைந்தனர். புலி சாலையை கடந்து செல்லும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மொரார்ஜி தேசாய் பள்ளி அருகிலேயே புலி நடமாடுவதால், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.'புலி நடமாட்டம் இருப்பதால், இரவு நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஆடு, மாடுகளை மேய்க்க வனப்பகுதிக்கு செல்ல கூடாது. சிறு பிள்ளைகளை வெளியே விட வேண்டாம். பகல் நேரத்திலும் தனியாக நடமாடுவதை, தவிர்க்க வேண்டும்' என, கிராமத்தினருக்கு வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ