உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரஹலட்சுமி ஓராண்டு முதல்வர் பெருமிதம்

கிரஹலட்சுமி ஓராண்டு முதல்வர் பெருமிதம்

பெங்களூரு: கிரஹலட்சுமி திட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி, இத்திட்டத்தால் பயனடைந்த பயனாளிகள் கதைகளை, தன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் முதல்வர் சித்தராமையா பகிர்ந்துள்ளார்.கர்நாடகாவில் கடந்தாண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், தேர்தலில் அளித்த ஐந்து வாக்குறுதிகளில் நான்கை அமல்படுத்தி உள்ளது. இதில் ஒன்றான இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் கிரஹலட்சுமி திட்டம், 2023 ஆக., 30ம் தேதி முதல்வர் சித்தராமையா, மைசூரில் துவக்கி வைத்தார்.இத்திட்டம் ஓராண்டு நிறைவை ஒட்டி, தன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டு உள்ளதாவது:என் சகோதரிகள், தாய்மார்களின் குடும்ப பராமரிப்பின் சுமையை குறைக்கவும்; அவர்களுக்கு வசதியான வாழ்க்கையை வழங்கவும் வடிவமைக்கப்பட்ட கிரஹலட்சுமி திட்டம் ஓராண்டு நிறைவு செய்துள்ளது.இந்த சந்தர்ப்பத்தில் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி, புது உற்சாகத்துடன் புது வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பயனாளி பெண்களின் வெற்றிக் கதைகளில் ஒரு சில மட்டுமே வெளியே தெரிய வந்துள்ளது. கண்களுக்கு தெரியாத பல ஆயிரம் கதைகள் உள்ளன. இவை அனைத்தும் இத்திட்டத்தின் வெற்றியின் கண்ணாடி. இவ்வாறு அதில்குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ